5 மாறிய திட்டம்

1.8K 91 13
                                    

5 மாறிய திட்டம்

நள்ளிரவு

இந்து, அவளுடைய பெற்றோரின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாளை முதல் அவளுடைய வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது.(அவள் நினைப்பது சரி தான்) அவள் வேறு ஒருவருடைய பிள்ளைகளின் வாழ்வில் அம்மாவின் ஸ்தானத்தை பெற போகிறாள். (அவள் நினைப்பது ரொம்ப சரி) நாளை அவளுக்கு, *என்னுடையவர்* என்று சொல்லிக்கொள்ள ஒருவர் கிடைக்கப் போகிறார். (அதுவும் அப்பட்டமான உண்மை)

ஆனால், அதெல்லாம்  அவள் நினைத்துக் கொண்டிருக்கும் ரீதியில் நடக்கப் போவதில்லை. ஒரே நாளில் அவளுடைய வாழ்க்கை தலைகீழாக மாறத் தான் போகிறது. தன் அம்மாவிற்கு அடுத்த ஸ்தானத்தை அவளுக்கு அளித்து, அவளை தன் தலைமேல் வைத்து தாங்க போகிறான் அர்ஜுன். அவனை தன்னுடையவன் என்று இறுமாப்புடன் சொல்லப் போகிறாள் இந்து... வரும் காலங்களில்...!

"எனக்கு நாளைக்கு கல்யாணம். தப்போ சரியோ, கஷ்டமோ நஷ்டமோ, நல்லதோ கெட்டதோ, அதை கையாளும் தைரியத்தை எனக்கு குடுங்க. எந்த பிரச்சனை வந்தாலும், *அவர் பக்க* நியாயத்தையும் பார்க்கிற மனப்பக்குவத்தை எனக்கு குடுங்க. எல்லா கஷ்டத்தையும் ஜெயிச்சு வர்ற தைரியத்தை எனக்கு குடுங்க. எனக்கு தெரியும், உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் இருக்கும். எனக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்கணும்னு எனக்கு என்னை ஆசீர்வதிங்க" என்று காலமான தன் பெற்றோரிடம் வேண்டிக் கொண்டாள் இந்து.

அதேநேரம்.... அதே பாண்டிச்சேரியின் வேறு இடம்

நல்லிரவாகவிட்ட போதிலும், அர்ஜுன் படுக்கையில் இல்லை. அவனுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அவன் அமைதியற்று காணப்பட்டான். அவனுடைய அமைதியின்மைக்கு காரணம், நாளை இந்துவின் திருமணம் என்பதால் அல்ல. ஒரு பெண், தன்னை சேர்ந்தவர்களால் எவ்வளவு இழிவாக நடத்தப்பட்டு இருக்கிறாள் என்பதை நினைக்கும் பொழுது அவன் மனம் அமைதியிழந்தது. இந்துவிற்கு, அவளுடைய அம்மாவின் முகம் ஞாபகம் இருக்க கூட வாய்ப்பில்லை. அவள் உலகத்தை புரிந்து கொள்ளும் முன்னரே அவர் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு, அவள் வாழ்க்கை மொத்தமும் அவள் சித்தியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டிருக்கிறது. தனக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று பிரித்துப் பார்க்கும் உரிமை கூட அவளுக்கு கொடுக்க படவில்லை. அவளுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, அவள் சித்தி சொல்படி அவள் அதை ஏற்றாக வேண்டும். அவளை இது வரை யாருமே மரியாதையாக நடத்தவில்லை போல் தெரிகிறது. அவளைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற துடிப்பில், அவனும் அவளுடைய புகைப்படத்தை வெளியிட்டு அவளை வருத்தமடைய செய்துவிட்டான். அதை பற்றி அவளுக்கு தெரிய வரும் பொழுது, அவள் நிச்சயம் வருத்தமடைவாள். இதற்குப் பின் எப்போதும் அப்படி நடக்கக் கூடாது, என்று நினைத்தான் அர்ஜுன்.
 
அவளை தன்னுடையவளாக மாற்றிக் கொள்வது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை அர்ஜுனுக்கு. அவளுக்கு தன்னை புரிய வைக்கும் முயற்சியில், அவன் ஒருவேளை கடுமையாக நடக்க வேண்டி வரலாம். அதனால், துவக்கம் சிறிது மென்மையாக இருக்கட்டும். அவனுடைய திட்டம் செயல்படுத்தபட்டால், இந்துவின் கண்களில் அர்ஜுன் ஒரு வில்லனாக தான் தெரிவான். இந்துகுமாரி என்ன செய்ய போகிறாளோ என்று அவன் மனம் பதைபதைத்தாலும், அதை தெரிந்துகொள்ளும் ஆவல் அவனுக்கு மேலோங்கியது.

இதய சங்கிலி (முடிவுற்றது )Waar verhalen tot leven komen. Ontdek het nu