Part 46

1.4K 89 7
                                    

பாகம் 46

அதீத தயக்கத்துடன் தங்களின் அறைக்குள் நுழைந்தாள் இந்து. கண்களை மூடிகொண்டு, சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அர்ஜுன். இந்து உள்ளே நுழைந்ததை உணர்ந்து கண்களைத் திறந்தான். அவள் தன்னை நோக்கி வருவதை பார்த்து நிமிர்ந்து அமர்ந்து, தன் கைகளை அவளை நோக்கி விரித்தான். சிறிதும் தாமதிக்காமல், ஓடிச் சென்று அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துகொண்டாள் இந்து. அர்ஜுன் அவள் இடையை சுற்றி வளைத்துக்கொண்டான். அவன் ஒன்றும் செய்யவில்லை... ஒன்றும் பேசவும் இல்லை... அப்படியே அமைதியாய் இருந்தான். அவனுக்கு அந்த கதகதப்பு தேவைப்பட்டது. சிறிது நேரம் வரை இந்துவும் ஒன்றும் பேசாமல் நின்றாள்.

 பிறகு மெல்ல ஆரம்பித்தாள்.

"என்னங்க... "

தன் தலையை மெல்ல நிமிர்த்தி அவளை பார்த்தான் அர்ஜுன்.

"ஹீனாவுக்கு நம்மளை விட்டா வேற யாரும் இல்லங்க"

நிமிர்ந்து அமர்ந்து கொண்டான் அர்ஜுன்.

"அவங்க அம்மா மோசமானவாங்களா இருந்தாலும் அவ நல்ல பொண்ணு தான் "

*விஷயத்திற்கு வா* என்பதைப் போல் அவளைப் பார்த்தான் அர்ஜுன்.

"அவங்க அம்மாவுடைய இறுதி சடங்கை செய்ய, நம்ம அவளுக்கு ஹெல்ப் பண்ணி தான் ஆகணும்"

ஒன்றும் சொல்லாமல் இருந்தான் அர்ஜுன்.

"முடியாதுன்னு சொல்லாதீங்க. யாரா இருந்தாலும் அவங்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டியது ரொம்ப அவசியம்... அவங்க இப்ப உயிரோட இல்ல... அதனால, அவங்க எப்படிப்பட்டவங்கன்னு நம்ம யோசிக்க வேண்டியதுமில்லை. ஹீனா, இப்போ, அது அவசியம் இல்லைன்னு நினைச்சாலும், நிச்சயமா ஃப்யூசர்ல ஃபீல் பண்ணுவா..."

இந்து சொல்வது சரியாகவே பட்டது அர்ஜுனுக்கு.

"நான் இறுதி சடங்குல கலந்துக்கவும் மாட்டேன்... அந்த பொம்பள முகத்தைப் பார்க்கவும் மாட்டேன்" என்றான்.

சரி என்று தலை அசைத்தாள் இந்து.

வரவேற்பறை

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now