Part 22

1.6K 90 11
                                    

பாகம் 22

தன் தலையில் அடித்துக் கொண்டார் வித்யா.

"இப்ப நான் என்ன பண்ணுவேன்?" என்று புலம்பினார்.

"நம்ம, மாஷாவுடையை பேச்சை கேட்டிருக்க கூடாது. அவங்களால தான் நம்ம வீடு, நம்ம கைய விட்டு போயிருச்சு." என்றாள் வீணா.

"நீ சொல்றது சரி தான். அர்ஜுன் டாகுமென்ட்ல கையெழுத்து போட்டுடதால, நமக்கு நம்ம வீடு நிச்சயம் கிடைச்சிருக்கும். அந்த பொம்பளை பேச்சைக் கேட்டு நம்ம வீணா போயிட்டோம். "

ஆமாம் என்று தலையசைத்தாள் வீணா.

"அவன் அவ்வளவு கோவமா வீட்டை விட்டு வெளியே போனதால, அவன் எப்படியும் இந்துவை வீட்டை விட்டு வெளியில் துரத்திடுவான், நம்ம மாஷாகிட்ட இருந்து ஒரு கோடி ரூபாய் வாங்கிக்கலாம்னு நெனச்சேன்.  ஆனா, அவன் இந்துவை போக விடமாட்டான் போலிருக்கே."

"நானும் அதைப் பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். அவன் சரியான பைத்தியக்காரனாக இருக்கான். அவன் என்ன முடிவெடுப்பான்னே தெரியல" என்று அலுத்துக்கொண்டாள் வீணா.

"நமக்கு இந்துவுடைய உதவிய கேட்கிறத தவிர வேறு வழியே இல்ல. அவகிட்டயிருந்து நம்ம வீட்டை வாங்கியாகணும்" என்றார் வித்யா.

"அது நடக்கும்னு எனக்கு தோணல. ஏன்னா, ஏற்கனவே அர்ஜுன் நம்ம வீட்டை அவன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டான்"

"ஆமாம்ல..." என்று பெருமூச்சு விட்டார் வித்யா.

"இந்து என்ன செய்ய போறானு நம்ம கொஞ்சம் பொறுத்து பார்க்கலாம்..."

சரி என்று தலையசைத்தார் வித்யா.

சங்கர் இல்லம்

வரவேற்பறையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த மாஷா, அர்ஜுனின்

"மாஷாஆஆஆ..." என்ற கர்ஜனையைக் கேட்டு திடுக்கிட்டார், அப்பொழுது அவர் கையில் இருந்த காபி அவர் மீது கொட்டி கொண்டது.

சங்கரும் ஹீனாவும் கூட அவன் கர்ஜனையை கேட்டு, அவர்களின் அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்கள். அவர்கள், அர்ஜுன் மாஷாவை நோக்கி முன்னேறுவதை பார்த்தார்கள். மாஷா எதோ ஏடாகூடமாக செய்து வைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அர்ஜுனுடைய கோபாவேசத்தை பார்த்து, மாஷாவின் முகம் வெளிறிப்போனது. அவருடைய கை, கால்கள் உதறல் எடுத்தது. நடுங்கியபடி எழுந்து நின்றார். ஏற்கனவே, அர்ஜுனுக்கு பத்திரத்தை பற்றிய விபரம் தெரிந்து விட்டது என்பதை வித்யா அவருக்கு கூறியிருந்தார் அல்லவா? மாஷாவை, அர்ஜுன் நேருக்கு நேர் எதிர் கொள்வது இது தான் முதல் முறை. இதுவரை, அவன் மாஷாவை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now