2 இந்து குமாரி

2.1K 88 6
                                    

2 இந்து குமாரி

*சங்கர் இல்லம்*

மாஷா, கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால், அவளுடைய காட்டுகத்தலுக்கு சங்கர் செவிசாய்க்கவேயில்லை.

அர்ஜுன் அவரை கத்தியால் குத்த முயற்சித்த நாளிலிருந்து தன்னுடைய செயலுக்காக மனதார வருந்த ஆரம்பித்திருந்தார் சங்கர். அவர் மகனே அவரை கொல்ல நினைத்தது தான், அவரை வெட்கி தலைகுனிய வைத்த சம்பவம். ஆனால், அது காலம் கடந்த ஞானோதயம். தவறுகளை திருத்தியமைக்கும் கட்டத்தை அவர் கடந்து வெகு காலமாகிவிட்டிருந்தது. அனைத்தும் அவர் கைமீறிப் போய்விட்டிருந்தது.

"நீங்க ஒரு உதவாக்கரை. என்னை பாத்து அவன் பேய் மாதிரி கத்தினானே, அப்ப ஏதாவது சொன்னீங்களா? வாய மூடிகிட்டு அப்படியே சிலை மாதிரி நின்னீங்க..."

"என்னை என்ன செய்ய சொல்ற? நான் என்ன செய்ய முடியும்? என்னால் அவன் முகத்தை கூட பார்க்க முடியல. என்னால தான் அவன் தன்னுடைய மொத்த சந்தோஷத்தையும் இழந்து நிற்கிறான். அவனும் சீதாவும் எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்கன்னு தெரியுமா உனக்கு?"

"நானும் தான் என் புருஷனோட சந்தோஷமா இருந்தேன். நீங்க தான் என் மனசை மாத்திட்டீங்க. உங்களால தான் நான் கேடுகெட்டவள்னு பேரெடுத்தேன். எல்லாமே உங்களால தான். நீங்க ரொம்ப மோசமானவர். உங்களுடைய சந்தோஷத்துக்காக நீங்க என்ன வேணும்னாலும் செய்வீங்க. நீங்க ஒரு சுயநலவாதி..."

"நீ தானே உன் புருஷனை பத்தி எப்ப பாத்தாலும் குறை சொல்லி, சொல்லி என்கிட்ட அழுத? நான் உன்னை சமாதானப் படுத்தினப்போ, நீ தான் என்னை கட்டிப்புடிச்சு அழுத..."

"நான் உங்களை கட்டி பிடிச்சப்போ நீங்க ஏன் என்னை தள்ளி விடல? ஏன்னா, உங்களுக்கு அது தேவைபட்டுச்சி. அந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணி, நீங்க என்னை தொட நெனச்சிங்க. உங்க பொண்டாட்டி உண்மையிலேயே நல்லவளா இருந்தா, உங்களுக்கு ஏன் இன்னோரு பொம்பளை தேவைப்பட்டுது?"

"வாய மூடு. உனக்கு சீதாவைப் பத்தி பேச எந்த தகுதியும் இல்ல. அவ கடவுள் மாதிரி"

இதய சங்கிலி (முடிவுற்றது )Where stories live. Discover now