அத்தியாயம் - 01

2K 25 1
                                    

தவன் தனது பொன்னிற கதிர்களை கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் மீது பரப்பிக்கொண்டிருந்த காலை பொழுது, அனைவரும் அவரவர் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

சூரிய கதிர்கள் ஜன்னல் வழியாக உள்ளே வந்து அவள் முகத்தில் பட, சோம்பல் விலகி கண்விழித்தாள் சஞ்சனா. வட்டம் முகம், ஆப்பிள் கன்னங்கள், செர்ரி உதடுகள், மாநிறத்திற்கு சற்று கூடுதலான நிறம், இடையை தொடும் அளவு வளர்ந்த கார் கூந்தல், புன்னகை மாறாத முகம் என்று அவளது வயதிற்கே உரிய அழகுடனும், குறும்புத்தனத்துடனும் இருந்தாள்.

தன் அறையிலிருந்து வெளியே வந்தவள், வீடு அமைதியாக இருப்பதை கண்டு குழப்பமடைந்தாள். அவள் அருகில் வந்தார் பாட்டி மீனாட்சி. அந்த குடும்பத்தின் தலைவி. கணவர் சுந்தரத்தின் சொல்லே வேதமந்திரம் என்று நினைத்து வாழ்ந்து வருகின்றார்.

"அடியே...யாரடி தேடிட்டு இருக்கவ", என்று அவளிடம் கேட்டார் மீனாட்சி.

"பாட்டி நீ மட்டும்தான் இருக்க மத்தவங்கள காணோம்", என்று வீட்டை சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

"மணி என்னனு பாருடி, பொட்ட புள்ளயா காலங்காத்தால சீக்கிரம் எழுந்துக்க வேணாம், சக்தியும் வினயும் கூட எழுந்துகிட்டானுங்க, இவ வரா... எட்டு மணிக்கு, இதுல கேள்வி வேற, ம்க்கும்", என்று அவர் நொடித்துக்கொண்டார். ஆனால் இதையெல்லாம் கேட்பதற்கு அவள் அங்கு இருந்தாள் தானே! அவர் சக்தி, வினய் பெயரை சொன்னதுமே அவர்களை தேடி சென்றுவிட்டாள்.

வீட்டின் மொட்டைமாடியில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த, சக்தி மற்றும் வினயின் அருகில் சென்றாள். அவர்கள் திரும்பி இவளை பார்க்க, புன்னகை முகமாக இருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அதை குறைத்து இருவரையும் தீயென முறைக்க ஆரம்பித்தாள். அவளின் முகபாவனைகளை கண்டவர்களுக்கு ஏதோ சரியில்லை என தோன்றியது.

அவள் சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஏதாவது அடிக்க கிடைக்கிறதா என்று ஆராய,

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now