அத்தியாயம் - 43

254 12 0
                                    

அதிரதன் அலுவலகம்...

    அதிரதன் அழைக்க, அவனது கேபினுக்கு சென்றாள் சஞ்சனா. உள்ளே ஏற்கனவே அவளது அலுவலகத்தில் பணிபுரியும் விகாஸ் மற்றும் ரஞ்சிதா இருந்தனர்.

    "குட் மார்னிங் சார்... வர சொல்லிருந்தீங்க... எனிதிங்க் இம்பார்டன்ட் சார்", என்றபடி உள்ளே வந்தவள் அங்கிருந்த இருவரையும் பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள்.

     அதிரதன் பேசினான். "நம்ம கம்பனில பெரிய அளவில செய்யப் போற ப்ராஜெக்ட் இது... நீங்களாம் ரொம்ப டேலன்ட் அன்ட் டிஸர்வ்ட் பர்சன்... அதான் உங்களைய சூஸ் பண்ணிருக்கோம்... பட் ப்ராஜெக்டுக்கு நீங்க ஆஸ்திரேலியா போகனும் உங்களோட அங்க இன்னும் நிறைய பேர் வொர்க் பண்ணுவாங்க... வேலை அங்க தான் நடக்கும்... ரெண்டு மூணு மாசத்துக்கு மேல தங்கி முடிக்கிற மாதிரி இருக்கும்... டீலிங் முடிக்காம ரிடர்ன் வர முடியாது... உங்களுக்கான பிக்கெஸ்ட் ஆப்பர்டூனிட்டி... லைப் ஸ்டைலே மாத்த கூடியது... சோ நல்லா யோசிச்சு முடிவை சொல்லுங்க... டேக் யுவர் ஓன் டைம்", என்று மூவரிடமும் பொதுவாக கூறிவிட, விகாஸ் மற்றும் ரஞ்சிதா பின் வெளியேறியே சஞ்சனாவை தடுத்து, அமரச் சொன்னான்.
  
        "சஞ்சனா... உங்களுக்கு உங்க டேலன்ட் ப்ரூவ் பண்ண சரியான சான்ஸ்... பட் நீங்க என்ன முடிவு பண்ணாலும் அதை ஏத்துக்கிறேன்... பட் மிஸ் பண்ணிடாதீங்க... எம்டிங்கிறத தாண்டி ஒரு ப்ரெண்டா சொல்றேன்", என்று சஞ்சனாவிடம் அதிரதன் கூற, அவள் சிறு புன்னகையோடு "யோசிச்சிட்டு சொல்றேன் சார்", என்று விடைப்பெற்றாள்.

 
சஞ்சனாவின் வீட்டில்...

          வினயின் திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க, அதே சமயம் விஷ்ருத்தை ஏர்போட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்திருந்தார் வாசுதேவன். அவரும் எல்லோருடனும் ஐக்கியமாகிவிட, மீனாட்சி தன் மனதை உறுத்திய விஷயத்தை கூறினார்.

     "நம்ம வீட்ல இருந்து தேவகி போயிருந்தாலும்... இந்த வீட்டோட மூத்த பேரனா... வினய்க்கு  அண்ணனா... விச்சு இருக்கப்போ... வினய்க்கு எப்டி முதல்ல கல்யாணம் பண்ண முடியும்... அண்ணனுக்கு பண்ணிட்டு தம்பிக்கு பண்றது தானே முறை", என்று பொறுமையாக அதே சமயம் அழுத்தமாக கூறினார் மீனாட்சி.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞حيث تعيش القصص. اكتشف الآن