அத்தியாயம் - 31

317 16 0
                                    

         அதிரதன் ஜான்சியுடன் கீழே வர, ராதிகாவும் லக்கேஜ் எல்லாம் எடுத்து வைத்து லலிதா மற்றும் லோகநாதனிடம் பேசிக் கொண்டிருந்தார். அருகில் விஷ்ருத்தும் தேவகியும் நின்றிருக்க அவர்கள் முகத்தை வைத்தே ஏதோ தவறாக இருப்பது போல் அவனுக்கு தெரிந்தது.

   அவன் வந்ததும் ராதிவை அழைத்துக் கொண்டு ஏர்போட்டில் விட புறப்பட்டனர் லோகநாதன் மற்றும் விஷ்ருத்.

      அங்கு சென்று பார்க்க வினயும் சக்தியும் இவர்களுக்கு அருகிலே நின்றிருந்தனர்.

       "சார்... நீங்களும் இன்னிக்கேவா ஊருக்கு வறீங்க"

     "ஆமா சக்தி... புது ப்ராஜெக்ட் வேலை நடக்குதுல... அதான்"

     "சூப்பர் சார்... நீங்க ஒரு கடமை தவறாத உழைப்பாளினு நிரூபிக்குறீங்க"

     "எதுக்குடா இப்டி ஐஸ் வச்சுட்டிருக்கீங்க", என்றபடி விஷ்ருத்தும் அவர்களுடன் இணைந்துக் கொண்டான்.

    பின் ப்ளைட் கிளம்பும் அறிவிப்பு வந்தது. ராதிகா, அதி, வினய், சக்தி நால்வரும் சென்னைக்கு புறப்பட்டனர். விஷ்ருத் மற்றும் லோகநாதன் இல்லம் சென்றனர்.

சஞ்சனாவின் வீட்டில்...

       வினயும் சக்தியும் வீட்டிற்குள் வர, ஹாலிலே எல்லோரும் அமர்ந்திருக்க இவர்கள் இருவரும் எல்லோருடனும் இணைந்துக் கொண்டனர். பின் அதிரதனின் நிச்சயதார்த்தம் பற்றி கேட்க, டெல்லியில் நடந்தவற்றை கூறினர் இருவரும். வாசுதேவனிடமும் அதிரதன் அவரை கேட்டது பற்றி கூறினர்.

       சிறிது நேரம் கழித்து இருவரும் அவர்கள் அறைக்கு வர, பின்னோடு சஞ்சனாவும் வந்தாள்.

      நாற்காலியை இழத்துப்போட்டு அதில் அமர்ந்தவள் சோகம் அப்பிய முகத்துடன் இருவரையும் பார்த்தாள். அவர்கள் குழப்பமாக பார்த்து அவளின் அருகில் அமர, அவள் வாசுதேவன் கம்பனியில் நடந்தவற்றை கூறினாள். இதை கேட்டவர்களுக்கு அதிர்ச்சியும், கோபமும் ஒருசேர வந்தது.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now