அத்தியாயம் - 55

328 13 0
                                    

சஞ்சனா வீட்டில்...

     "எங்கப்பா பார்த்த மாப்பிள்ளை நீ... அதனால உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்...  அவ்ளோதான்... மத்தபடி எதுவும் இல்லை", என்றவளை கண்டு விஷ்ருத் திகைத்தான். அவள் நமட்டு சிரிப்புடன் அவனை பார்க்க, அவன் குழப்பமாக அவனை பார்த்தான்.

   "எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் விஷ்ருத்... அதுக்கு காரணம் கேட்டா எனக்கு சொல்ல தெரியாது... நான் செய்ற எந்த விஷயமும் மத்தவங்கள கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைப்பேன்... ஆனா உன்ன காதலிச்சு உனக்கு நான் நிறைய கஷ்டத்த கொடுத்துட்டேன்", என்றவள், "நம்ம ரெண்டுபேரும் காதலிச்சு... வீட்ல எல்லாரும் சம்மதிக்க நமக்கு கல்யாணம் நடக்காதான்னு எத்தன நாள் நினைச்சு... ஏங்கியிருக்கேன்... இப்போ அது நான் ஆசை பட்டபடியே நடந்துடுச்சு... எனக்கு இது போதும்", என்றவள் பட்டென்று அவனை அணைத்துக் கொண்டாள். அவள் கூறியது புரியவே விஷ்ருத்திற்கு சில நொடிகள் ஆனது.

     எவ்வித அசைவுமின்றி விஷ்ருத் நிற்க, அவனிடமிருந்து விலகியவள், "ஹே... எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற", என்று சிரித்தாள்.

     "பின்ன ஷாக் ஆகாம... நீ சொன்னத கேட்டு உள்ள பதிறிடுச்சு தெரியுமா... ஏன் அப்டி சொன்ன"

     "ஓஹோ... உனக்கு மட்டும் தான் பதறுமா... 'நான் தான் உன்ன பொண்ணு பாக்க வரேன்'னு சொன்னியா நீ... எவ்ளோ டென்ஷன்... அழுகை... கவலை தெரியுமா எனக்கு... அதுக்குதான்... ஒரு டிட் பார் டாட்"

     அவள் சொன்னதை கேட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவன், முகத்தில் கொள்ளை புன்னகையுடன், "கட்டிப்பியா", என்று புருவம் உயர்த்தினான்.

     "அதுக்கு நாள், கிழமை, நல்ல நேரமெல்லாம் பாக்கனுமே", என்று அப்பாவியாக கூறி, உதட்டை பிதுக்கினாள்.

     "ஆண்டவா... இவள என்ன தான் பண்றது", என்று வாய்விட்டே புலம்பியவன், அவள் சுதாரிக்கும் முன்னே அவளை தாவி அணைத்துக் கொள்ள, அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now