அத்தியாயம் - 40

343 14 0
                                    

சஞ்சனா தலையை பிடித்தபடி அமர்ந்திருக்க அவளுக்கு எதிரில் வினயும் சக்தியும் மாறிமாறி தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

     நேற்று இரவு வினயை சமாதனம் செய்து அறைக்கு அழைத்து வந்த பின் அவனிடம் தன் அலைப்பேசியை கொடுத்து "பானுக்கிட்ட பேசிட்டு தா... நாளைக்கு உனக்கு போன் வாங்கிடலாம்" என்று முறுவலுடன் கூறினான் சக்தி.

   பின் அவன் உறங்கிட, வினய் பானுவிடம் பேசித் தொடங்கினான்.

    மணி இரண்டிருக்கும்... திடீரென ஏதோ அலறல் சத்தம் கேட்க, வாரி சுருட்டி எழுந்தான் சக்தி. வினய் அவனை வினோதமாய் பார்த்து "என்னாச்சு மச்சான்", என்க, "இல்லடா ஏதோ பேய் பேசுன மாதிரி வித்தியசாமா சவுண்ட் கேட்டுச்சு", என்று பயந்தபடி கூறினான்.

     "பேய்லாம்  இல்ல மச்சான்... நான் தான் சிரிச்சிட்டிருந்தேன்... சத்தமா சிரிச்சா எல்லாருக்கும் கேட்டிரும்ல... அதான் ஹஸ்கி வாய்சில சிரிச்சேன்", என்று மீண்டும் அதே போல் சிரித்து காண்பிக்க,  "மனுஷன் தான நீ... சிரிப்புல என்ன உனக்கு இன்ஸ்டால்மென்ட் வேண்டி கிடக்கு... ஹஸ்கி வாய்சில சிரிப்பு... ஏன்டா இப்டி உயிர எடுக்கற வினயம்" என்று இன்னும் கொஞ்சம் நல்ல வார்த்தைகளால் வினயை திட்டிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தான் சக்தி.

     காலை விடிந்து மணி ஆறு ஆகியிருக்க, சக்தி உறக்கம் கலைந்து எழ, அருகில் வினய் உறங்கிக் கொண்டிருந்தான். காலை கடன்களை முடித்துவிட்டு வெளிய வர, வினய் எழுந்திருந்தான்.

     பின் தங்களது உடற்பயிற்சியை தொடங்க மாடிக்கு சென்றனர்.

    "எப்படா தூங்கன" சக்தி.

   "நீ தூங்கன கொஞ்ச நேரத்துலயே", என்று வினய் திருட்டு முழி முழித்தான். 'முழியே சரில்லையே' என்று சக்தி நினைத்து "சரி போன் எங்கடா... நான் பாத்தப்போ ரூம்ல இல்லயே" என்றான் சந்தேகமாக. "ரூம்ல தான் இருக்கும்", என்று வினய் கூற, சக்தி நம்பாமல் பார்த்தான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now