அத்தியாயம் - 13

485 17 0
                                    

       திரதனிற்கு அந்த இளைஞனை பார்த்ததும் அவ்வளவு நேரமிருந்த இதமான சூழல் மறைந்தது. காலையில் நடந்தது நினைவுவர கோபம்தான் வந்தது. அந்த இளைஞனோ எதேச்சையாக திரும்பினான். இவர்களை பார்த்ததும், போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு இருவரையும் நோக்கி வந்தான்.

       அதிரதன் வாசுதேவனிடம் விடைப்பெற்று கிளம்ப எத்தனிக்க, அந்த இளைஞன் வரவும் சரியாக இருந்தது.

       வந்தவன் நேராக வாசுதேவனை அணைத்துக் கொண்டான். அவனை பார்த்தவருக்கு ஆனந்தத்தில் வார்த்தைகளே வரவில்லை. அதிரதன் இருவரையும் புரியாமல் பார்த்தான்.

    வாசுதேவனிற்கு சட்டென அதிரதன் அங்கிருப்பது நினைவு வர, சிறு புன்னகையோடு "அதிரதன், திஸ் இஸ் மை சன்...", என்று வாசுதேவன் அறிமுகப்படுத்த பெயரை கூற வருவதற்குள்,

    அந்த இளைஞனே "ஐம் விஷ்ருத் வாசுதேவன்!", என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அதிரதனின் கையை பிடித்து குலுக்கினான்.

    வாசுதேவன் இருப்பதாலும் அவரின் மகன் என்பதாலும் அதிரதன் தன் கோபத்தை வெளிகாட்டாமல் கடமைக்கென விஷ்ருத்தை பார்த்து சிரித்து, "ஐம் அதிரதன்!", என்றான்.

     "ஓகே சார். அப்ப நான் வரேன். வேலை இருக்கு!", என்று வாசுதேவனிடம் கூறிவிட்டு புறப்பட்டான் அதிரதன்.

    அதிரதன் செல்வதை பார்த்த விஷ்ருத், 'காலையில நடந்தத சார் மறக்கல போல', என்று நினைத்து தோளை குலுக்கினான்.

      "என்னடா? திடீர்னு இந்தியாவுக்கு வந்திருக்கே. என்னையெல்லாம் நியாபகமிருக்கா?", என்று வாசுதேவன் நக்கலாக கேட்டார்.

      "டாட்! என்ன வம்புக்கு இழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதே. நீங்க எப்டியும் ஆபிஸ்ல தான் இருப்பீங்கனு நினைச்சு வந்தவுடனே ஆபீஸ்க்குதான் போனேன் அங்க போனா. 'சார் வெளில போய்ருக்காரு'னு சொன்னாங்க... அப்புறம் எங்க'னு தெரிஞ்சிக்கிட்டு நேரா இங்க வந்துட்டேன்", என்று விஷ்ருத் கூறியதை கேட்டவர்,

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now