அத்தியாயம் - 30

336 16 0
                                    

        வினய், சக்தி இருவரும் தேவகி அருகில் சென்றனர்.

    "எப்டி இருக்கீங்க பெரியம்மா?", புன்னகையுடன் கேட்டான் வினய்.

    "எனக்கென்ன நல்லாதான் இருக்கேன்", குரலில் அலட்சியம் தெரிந்தது.

    வினயும், சக்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

     "அவ எப்டி இருக்கா", என்று சஞ்சனாவை பற்றி கேட்க, இருவரும் 'யார் அந்த அவள்' என்று விழித்தனர்.

     "யாரை சொல்றீங்க அத்தை" சக்தி வினவினான்.

    "அதான் சஞ்சனா", என்றதும் 'இவங்க ஏன் அவள கேக்குறாங்க' என்ற குழப்பத்துடன் "நல்லாயிருக்கா பெரியம்மா" என்றான் வினய்.

    "நல்லாயிருக்காளா... ஹ்ம்ம்... நான் கூட காதல் தோல்வில ஒன்னு கிடக்க ஒன்னு நடந்திருக்கும்னு நினைச்சேன்... ஏமாத்துக்காரில அதான் தெளிவா இருக்கா போல", என்று அவர் கூறியது எதற்காகவென சத்தியமாக இருக்குமே விளங்கவில்லை. ஆனால் சஞ்சனாவை பற்றி தவறாக கூறியதும் கோபம் வந்துவிட்டது.

   "அத்தை என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா... ஏன் இப்டி தப்பா பேசுறீங்க", என்று வினய் கோபமடைந்தான்.

    "தப்பு பண்ணா தப்பா தான் பேசுவாங்க... என்ன கேட்ட நீ... என்ன பண்ணாளா... என் பையன காதலிச்சு ஏமாத்த பாத்திருக்கா... அதை நான் கண்டுபிடிச்சு நல்ல திட்டிவிட்டிருக்கேன்... அதான் மேடம் இங்க வரல போல", என்றவர் மிடுக்கான தோனியில் "ஹ்ம்ம் சரி... அதெல்லாம் எனக்கெதுக்கு... ரெண்டுபேரும் நல்லபடியா ஊர் போற வழிய பாருங்க... நான் வரேன்", என்று தேவகி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

     வினயும் சக்தியும் கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தனர். இவர்கள் இருவரையும் அழைக்க வந்து விஷ்ருத் தேவகி பேசியதை கேட்டு கண்கள் சிவக்க நின்றிருந்தான்.

    அவர் சென்றுவிட திரும்பியவர்களின் கண்முன் தெரிந்தது விஷ்ருத் தான். இருவரும் அவனிடம் கூறிவிட்டு கிளம்பி வந்தனர்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now