அத்தியாயம் - 57

858 24 10
                                    

வினய், சக்தி இருவரும் வாசலிலே குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருக்க, "யாருடா அது", என்று கத்திக் கொண்டே வந்த சுந்தரத்தை கண்டு இருவரும் அதிர்ச்சியோடு நின்றனர்.

    இருவரின் அருகில் வந்தவர், "அடேய் நீங்களா... நா ஏதோ களவாணி பசங்கன்னு நினைச்சு கம்பு எடுத்துட்டு வந்துட்டேன்", என்று தடியை கீழே போட்டவர், "இந்நேரத்துல இங்க என்னடா பண்றீங்க", என்று முறைத்தார்.

    "அ... அது வந்து தாத்தா... ஹாங்... டிஸ்கஷன் தாத்தா... ஆபீஸ் டிஸ்கஷன்", வாயிற்கு வந்ததை உளறினான் வினய். அவர் நம்பாமல் பார்த்தார்.

    சரியாக விஷ்ருத்தும் சஞ்சனாவும் வந்துவிட, அவர்களை கண்டு இருவரும் தலையில் கைவைத்து கொண்டனர். சுந்தரம் அமைதியாக இருந்தார்.

    வண்டியை நிறுத்திவிட்டு "ஹாய் தாத்தா", என்றபடி அவர் அருகில் வந்து நின்றான் விஷ்ருத். சஞ்சனா லேசான பயத்தில் விஷ்ருத் அருகில் நின்றுக் கொண்டாள்.

    "எங்க விச்சு போய்ட்டு வரீங்க", என்றார் சுந்தரம்.

     அவன் என்ன சொல்வான் என்று மற்றவர்கள் அவன் முகத்தை ஆர்வமாக பார்க்க, "சும்மா தாத்தா... வெளில ஒரு அவுட்டிங்", என்று உண்மையை கூறிவிட்டான்.

    "அட இதுக்கா இவனுங்க இப்டி பண்ணானுங்க... நான் என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டேன்... சரி சரி நேரமாகிடுச்சு போய் தூங்குங்க", என்று சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார் சுந்தரம்.

   "இது நம்ம லிஸ்டில்யே இல்லயேடா", சக்தி வாயை பிளக்க,

   "இப்ப இவன் என்ன சொல்லிட்டான்னு இந்த தாத்தா சிரிச்சிகிட்டே போறாரு... இந்நேரத்துக்கு ஒரு ஆக்ஷன் சீன் வந்துருக்கனுமே", சஞ்சனா குழம்பிட,

    "டேய் எப்டிடா... தாத்தா எதுவுமே சொல்லாம போய்ட்டாரு", என்று ஆச்சரியமானான் வினய்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now