அத்தியாயம் - 46

245 12 0
                                    

மண்டபத்திலிருந்து புறப்பட்டவர்கள் நேராக வாசுதேவன் வீட்டிற்கு வந்தனர். நாளை குலதெய்வ கோவிலுக்கு சென்றாக வேண்டும் என்பதால் அனைவருமே இப்போதே அங்கு புறப்பட முடிவு செய்தனர்.

          விஷ்ருத் ராகவ் மற்றும் சர்வேஷை தவிர, மற்ற அனைவருமே மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்தனர்.

    ஊருக்கு கிளம்பும் வேலைகளை கவனிக்கத் தொடங்கிட, அந்த நேரம் தான் வாசுதேவனிற்கு விஷ்ருத் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. பேசிவிட்டு வைக்க அனைவருமே கிளம்பி இருக்க "அம்மா... நீங்க கிளம்புங்க... நானும் விஷ்ருத்தும் அப்றம் வரோம்", என்றார் வாசுதேவன்.

    "என்னப்பா வாசு இது! குடும்பமா போனா தானே நல்லாயிருக்கும்... நீங்க எப்டி தனியா வரமுடியும்?" சுந்தரம்.

    "இல்ல ப்பா! அங்க மண்டபத்தில வேலைய முடிச்சிட்டு விஷ்ருத் இங்க வர ஈவ்னிங் ஆகிடும். அவன் தனியாவர தேவகி ஒத்துக்க மாட்டா, அதான் நானே அவன கூட்டிட்டு வரேன்... நீங்க எல்லாரும் கிளம்புங்க!", என்று சமாளித்தார் வாசுதேவன். அவர் கூறுவது சரியெனத் தோன்ற அனைவரும் புறப்பட்டனர்.

    வழியில் செல்லும் போது பெரியவர்கள் ஏதோ சடங்குகளை பற்றி மும்முரமாக பேச, அந்த சாக்கில் அனன்யாவின் அருகில் காலியாக கிடந்த இருக்கையில் வந்தமர்ந்தான் சக்தி.

    "இன்னும் ஒரு வருஷத்தில நமக்கும் கல்யாணம்", என்று சக்தி ரசனையுடன் புன்னகைக்க, "அப்டிலாம் ஒன்னுமில்ல... ரொம்ப கற்பனை பண்ணாத", என்று அசட்டையாக கூறினாள். அவன் அதிர்ந்துப் போய் "அப்போ நீ என்ன லவ் பண்ணலையா... வீட்ல கேட்டப்போ ஓகே சொன்ன... எல்லாமே பொய்யா?", என்றான்.

    "எங்க அண்ணன் சொல்றது சரி தான்... நீ புத்தி இல்லாத சக்தி தான்" என்றவளிடம், "ப்ச் அனு" என்று அவன் சிணுங்க, "அதில்ல சக்தி... எனக்கு ஒரு வருஷத்தில படிப்பு முடிஞ்ச பிறகு... நானும் சஞ்சு அக்கா மாதிரி வேலைக்கு போகனும்... அதான் என் ஆசை... சஞ்சு அக்காவ பாரு... யாரையும் டிபென்ட் பண்ணல... அதே நேரம் வீட்லயும் ரொம்ப பொறுப்பான பொண்ணு... அவங்க ஒரு ஸ்டேபிளான வாழ்க்கைல வாழ்றாங்க... அதே மாதிரி நானும் ஆகனும்... அனன்யா இவரோட பொண்ணு... இவரோட மனைவின்னு சொல்றதை விட... அனன்யாவுக்கு ஒரு அடையாளம் வேணும்... கெத்தா இருக்கனும்... அப்றம் தான் நம்ம கல்யாணம்", என்று பெருமையாக கண்கள் மின்ன கூறினாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now