அத்தியாயம் - 15

413 17 0
                                    

             ஞ்சனா தன் காதலை பற்றி எதுவும் கூறாமல் கவனமாக தவிர்த்துவிட்டு... மற்ற அனைத்தையும் சிறு விசம்பலுடன் கூறி, வேதனை நிறைந்த முகத்துடன் வினயை நிமிர்ந்து பார்த்தாள். அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை.

    "வினய்! நீ இந்த விஷயத்த யார்கிட்டயும் சொல்லாத. நான் உன்கிட்ட விஷ்ருத் நிச்சியம் பத்தி பேசனது வாசு மாமாவுக்கு தெரிய வேணாம். அது அவருக்கு இன்னும் கஷ்டத்தை தரும். சரியாடா?", என்ற சஞ்சனாவின் வார்த்தைகளுக்கு சரி என்று வினய் தலையாட்டினான்.

   'அவனுக்கும் இதை கேட்கும்போது வேதனையாகதான் இருந்தது. தான் பெற்ற மகனிற்கு, தனக்கு தெரியாமலே நிச்சியம் நடந்திருக்கு... அதுவும் ஒரு செய்தியாகவே ஒரு தந்தைக்கு தெரியவந்தது எவ்வளவு கொடுமையானது', என்று வாசுதேவனின் நிலையை எண்ணவே துயரமாக உணர்ந்தான்.

     ஆனால் சஞ்சனாவின் மீது ஒரு சந்தேகம் எழ அதை அவளிடமே வினவினான்.

    "சஞ்சனா... நீ இதனால் தான் அழுதியா?", என்று வினய் நம்பாத பார்வையோடு கேட்டான்.

  'அய்யய்யோ! என்ன இப்டி கேக்குறான், என்ன சொல்லி சமாளிக்கிறது?', என்று நொந்தவள்,

     "ஆமா வினய்! வாசு மாமா சொன்னதையும் அவர் முகத்தையும் பாத்தப்ப ரொம்ப கஷ்டமாகிடுச்சு. அவர் முன்னாடி அழ கூடாதுன்னு தான் ரூம்க்கு வந்து அழுததேன் அத நீ பாத்துட்டா...", என்று தரையை பார்த்துக் கொண்டே கூறினாள்.

    அவனும், "விடு சஞ்சு! எல்லாம் சரியாகிடும். இதுக்கெல்லாம் பீல் பண்ணகூடாது. ஓகேவா ஸ்மைல் பண்ணு", என்று வினய் கூறியதும், சிறு கீற்றாக புன்னகை பூத்தாள்.

   விஷ்ருத்தும் வினயும், சிறு வயது முதலே நல்ல நண்பர்களாகவும்... சகோதரர்களாகவும் பழகியவர்கள்... தன்னிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்ததற்கு காரணம் ஏதேனும் இருக்கும் என்று வினயின் மூளைக்கூற, மனமோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. எதையும் வெளிக்காட்டாமல் சஞ்சனாவிடம் பேசினான். இருந்தாலும் சிறு வருத்தம் விஷ்ருத்தின் மேல் இருக்கத்தான் செய்தது.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now