அத்தியாயம் - 02

797 28 0
                                    

   [மீனாட்சி மற்றும் சுந்தரம் தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

   மூத்தவர் வாசுதேவன் சொந்தமாக பிஸ்னஸ் செய்கிறார்.

    இரண்டாவதாக பிறந்தவர் நாராயணன் ஆடிட்டராக பணிபுரிகிறார், அவர் மனைவி லட்சுமி இல்லத்தரசி, இவர்களின் மகன் வினய் மற்றும் மகள் அனன்யா.

    மூன்றாவதாக பிறந்தவர் சத்யா, பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிகிறார், அவரின் கணவர் கிருஷ்ணமூர்த்தி கேட்டரிங்ஸ் நடத்தி வருகிறார், இவர்களுக்கு ஒரு மகள் சஞ்சனா.

   நான்காவதாக பிறந்தவர் அமிர்தம் இல்லத்தரசி, அவரின் கணவர் அழகர் மருத்துவராக பணிபுரிகிறார். 
இவர்களின் மகன் சக்தி.

       வினய், சஞ்சனா, சக்தி மூவருக்கும் ஓரிரு வயது மட்டுமே வித்தியாசம். அதனால் சிறு வயது முதலே மூவரும் அதிக நெருக்கம். வினயின் தங்கை அனன்யா இவர்களை விட சிறியவள் மற்றும் மிகவும் சாந்தமான குணம் என்பதால் இவர்களுக்கும், அவளுக்கும் ஏழாம் பொருத்தம் தான். பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை மூவரும் இணைந்து படித்தனர்.

      பிறகு வேலையில் சேரும் போது அவர்கள் ஊரிலிருந்து வெளியூரில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு என்பதால்  ஹாஸ்டல் பார்க்கலாம் என்றெண்ணியவர்கள், வேலை அவர்கள் பாட்டி தாத்தா வசிக்கும் ஊரிலே கிடைத்துவிட்டதால் மூவரும் அவர்களுடனே தங்கிவிட்டனர். மீனாட்சி சுந்தரம் தம்பதிக்கு இவர்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி, வளர்ந்தாலும் குறும்பும், சேட்டையும் செய்யும் இவர்களின் குழந்தைதனம் யாருக்குத்தான் பிடிக்காது.

      பிள்ளைகளை பிரிந்த கஷ்டத்தை பேரன், பேத்தி தீர்த்துவிட்டனர். விடுமுறை நாட்களில் பெற்றோரை பார்த்துவிட்டு வருவார்கள் முடியவில்லை என்றால் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவர். அவர்களுக்கும் மூவரும் பத்திரமான இடத்தில் இருப்பதால் கவலையின்றி இருந்தனர்.]

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now