அத்தியாயம் - 07

552 21 0
                                    

      ந்த அடர்ந்த காட்டுக்குள், வானை நோக்கி வளர்ந்த உயரமான மரங்கள் எங்கும் நிறைந்திருந்தது. எதிரில் இருப்பவரை காண முடியாத அளவு அந்த காடு பனியினால் நிரம்பி புகை மண்டலமாக காட்சியளித்தது.
 
     சஞ்சனா அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்தபடியே நடந்துக் கொண்டிருக்க, அவளை யாரோ தொடர்வது போன்ற காலடி ஓசை கேட்க, வன விலங்காக இருக்குமோ என்று பயந்து, வேகமாக ஓட முயற்சித்தாள். அவள் செல்லும் பாதையில் மரம் ஒன்று சாய்ந்திருக்க, அதனை பார்க்காமல் ஓடியதில் அது அவள் காலை தடுக்கி விழ செய்தது. கையிலிருந்த போன் நழுவி கீழே விழுந்து உடைந்துவிட்டது.

     ஏற்கனவே காலில் ஏற்பட்ட காயத்தால் சோர்ந்திருந்தவள், இப்போது விழுந்ததில் எழ திராணியின்றி துடித்து "அம்மா....." என்று வலியில் கத்த,

      "சஞ்சனா என்னாச்சுமா என்ன பாரும்மா!", என்ற மீனாட்சி குரல் கேட்டு பதறியடித்து எழுந்தவள், தன் கால்களையும் கைகளையும் மாறிமாறி பார்த்தாள். எங்கும் எந்த காயமும் ஆகவில்லை. அவள் கண்டது கனவுதான் என்று புரியவே சில நிமிடங்கள் ஆனது.

    "ச்சே... கனவா?", என்று தலையடித்துக் கொண்டாள்.

    அதற்குள் மீனாட்சி அவளை பலமுறை "சஞ்சனா சஞ்சனா" என்ற கத்திவிட்டார்.

    அவர் கத்தல் வினய் சக்தி அறை வரையிலும் எட்டியது. அதில் உறங்கிக்கொண்டிருந்த சக்தி, உறக்கம் கலைந்து படுக்கையிலிருந்து எழுந்து தன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த வினயை எழுப்பினான்.

   "டார்லிங் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுடா", என்று கண்களை திறக்காமல் வினய் கூறிவிட்டு புரண்டு படுத்தான்.

    "டார்லிங்கா???", என்று சக்தி தலையில் அடித்துக் கொண்டு, "டேய் வினய்", என்று மீண்டும் அவனை உலுக்க, "நான்தான் நான்தான் நான்தான்", என்று இன்னும் கண்களை திறக்காமலே ராகம் இழுத்தான் வினய்.

    "இவன்கூட ஓரே அக்கப்போரா போச்சுடா", என்று கடுப்பான சக்தி, 'இப்ப உன்ன எப்டி எழுப்பறேன்னு பாரு' என்று, தொண்டையை செருமிக்கொண்டு பெண்ணின் குரலில் "அத்தான் எழுந்திரீங்க அத்தான்", என்று அவன் கன்னத்தை கிள்ளி கூற,

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now