அத்தியாயம் - 04

557 22 0
                                    


       திரதனின் அறையில் இருந்து வெளியே வந்த வினய், தான் வாங்கிய பல்ப்பை நினைத்து தன்னையே திட்டியவன், பசி வேறு வயிற்றை கிள்ள கேன்டீனிற்கு சென்றான். அப்போது இடைவேளி என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

     'இந்த கூட்டத்தில புகுந்து வாங்கி, நான் சாப்பிட்டு, நடந்த மாதிரி தான்!', என்று சலித்துக் கொண்டவன் காலியாக ஒரு டேபிள் இருக்க அங்கு சென்று அமர்ந்து கொண்டான்.

    சற்று நேரத்தில் அவன் கண்முன் சுடச்சுட டீயும், ஒரு பேக்கட் சிப்ஸ்சும் இருந்தது. அதை பார்த்தவனின் முகம் பிரகாசிக்க நிமிர்ந்து பார்க்க அவனை பார்த்தபடியே சஞ்சனாவும் சக்தியும் நின்றுக் கொண்டிருந்தனர்.

    "உட்காருங்க, ஏன் நிக்கிறிங்க?", என்று வினய் கூற, அவனுக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இருவரும் அமர்ந்தனர்.
  
      'நம்ப சொன்னவுடனே ரெண்டு பேரும் கேக்கறாங்கனா, ஏதோ திட்டத்தோட தான் வந்திருக்காங்க', என்று யோசித்தவன் இருவரையும் பார்க்க அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்
                                                         -மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து."
என்று சக்தி வினயை பார்த்தபடியே கூற, "அப்டினா?", என்று சஞ்சனா கேட்டாள்.

   "நினைப்பவை எல்லாம் உயர்வானதைப் பற்றியே இருக்க வேண்டும். அப்படி நினைத்த உயர்வு கைகூடா விட்டாலும், நினைப்பதை நிறுத்தக் கொள்ளக் கூடாது, இதுவே இக்குறளின் பொருளாகும்", என்று சக்தி ஆசிர்வதிப்பது போல் வினயின் தலைமீது கை வைத்து கூறினான்.

      "சுவாமியே... இப்ப எதுக்கு இதை என்னிடம் சொன்னீர்கள்?", என்று வினய் சக்தியின் கையை தட்டிவிட்டான்.

     "ஏன்டா நீ பகல் கனவு கண்டது எங்களுக்கு தெரியாம இருக்குமாடா? நீ அவ்வளவு பில்டப்பு கொடுத்து போனப்பவே நினைச்சோம்! ஏதோ லூசுதனமா நினைச்சிருப்பன்னு. நீ மூஞ்ச தொங்க போட்டுட்டு வந்தயே அதையும் பாத்தோம், அப்பவே கன்பார்ம் பண்ணிட்டோம், ஏதோ எதிர்பார்ப்போட தான் போயிருக்கன்னு. ஆனா உள்ள என்ன நடந்ததுன்னு தான் தெரில!" என்றாள் சஞ்சனா.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now