அத்தியாயம் - 54

257 11 0
                                    

சஞ்சனா வீட்டில்...

     கிருஷ்ணமூர்த்தி ஹாலில் அமர்ந்து பேப்பரை புரட்டிக் கொண்டிருக்க, சத்யா அடுக்களைக்குள் வேலையிலிருக்க, சஞ்சனா எழுந்து வந்தாள்.

    தன் தந்தை அருகில் அமர்ந்துக் கொண்டாள். அவளுக்கு காபியுடன் வந்தார் சத்யா.

  அதை வாங்கியவள் பருக ஆரம்பிக்க, சத்யா செய்கையில் கிருஷ்ணமூர்த்தியிடம் ஏதோ சொல்ல, அவர் தலையை ஆட்டினார்.
  
     "சஞ்சுமா...", என்றவர் அழைப்பில் தன் தந்தையை பார்த்தவளிடம், "இன்னும் அஞ்சு நாள்ல உன்ன பொண்ணு பாக்க வராங்கடா... உனக்கு சம்மதம் தானே", என்றவரை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்துவள், "சம்மதம்ப்பா", என்று பட்டென்று கூறினாள்.

    உள்ளுக்குள் ஏதோ ஒரு பயம் தொற்றிக் கொண்டது. ஆனால் தான் விரும்பியே ஏற்றது தானே என்றது மனம்.

    சத்யா சிரிப்படன், "பையன் போட்டோ இந்தா" என்று மேஜையிலிருந்த அவரது அலைப்பேசியை கொடுக்க,

    "உங்களுக்கு பிடிச்சிருக்குல... அது போதும்... நீங்க எது செஞ்சாலும் அது என் நல்லதுக்கு தான்", என்றவள், சம்மதம் தெரிவித்ததோடு சரி அதற்கு மேல் தன் தந்தை பார்த்து வைத்த வரன் பற்றிய வேறு எந்த விவரமும் கேட்கவில்லை.

     அதன் பின் வந்த நாட்களில் ஒரு நாள் வினய் பானுமதியின் ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் விடுமுறை நாளிலே வைத்ததால் மொத்த குடும்பமும் வந்திருந்தது. விழா முடிந்து சொந்தங்கள் புறப்பட்டனர்.

   வினய், சஞ்சனா, சக்தி, சர்வேஷ் மற்றும் ராகவ் என்று நண்பர்கள் கூட்டமாக அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

   "இந்த விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினரான சஞ்சனாவிற்கு ஒரு 'ஓ' போடுங்க", என்று ராகவ் கூற, மற்றவர்கள் ஓ போட, "அடேய் ஏன்டா மானத்த வாங்கற", என்று சஞ்சனா அவன் தோளில் அடித்தாள். அனைவரும் சிரித்துவிட்டனர்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now