அத்தியாயம் - 36

294 15 0
                                    

வேலை எல்லாம் முடித்து கார் பார்க்கிங் பகுதியில் வண்டியை எடுக்க வந்துக் கொண்டிருந்த வாசுதேவனிற்கு ராதிகாவிடமிருந்து அழைப்பு வந்தது.

    "ஹலோ... ராதிகா"

    "வாசுதேவன்... என்று தொடங்கி, அடுத்த அவர் சொன்னதை கேட்டு வாசுதேவன் அதிர்ச்சியோடு நிற்க, சரியாக விஷ்ருத் வந்திருந்தான்.

    "என்னாச்சு டாட்... போன்ல யாரு"

   "ஒன்னுமில்ல... நீ கிளம்புடா... சின்ன வேலை நான் அதை முடிச்சிட்டு வந்திடுறேன்... பை" என்று சகஜமாக பேசுவது போல் காட்டிக் கொண்டார்.

    "ப்ச்... பரவால வாங்க சேர்ந்தே போலாம்", என்று விஷ்ருத் கூறியதும் மறுத்துவிட்டார். அவனை கிளப்பிவிட்டு ராதிகாவை காண சென்றார்.

    சாலையில் கவனம் வைத்திருந்த விஷ்ருத் மனதில் வாசுதேவனின் நினைப்பே ஓடிக்கொண்டிருந்தது. வாசுதேவன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அதே குழப்பத்துடன் வண்டியை செலுத்தி, வீட்டிற்கு வந்தான்.

     தேவகி அவன் வந்ததை பார்த்து சிறிது நேரம் பேசினார். பின் சாப்பிட அழைக்க, பிறகு சாப்பிட்டு கொள்வதாக கூறிவிட்டு உடைமாற்றி வந்து டிவி பார்க்க அமரந்துவிட்டான்.

     நூறு சேனலுக்கு மேல் மாற்றியிருப்பான்... மனம் எதிலுமே லயிக்கவில்லை. வாசுதேவனிற்கு அழைத்தான். அவர் எடுக்காமல் போக, தேவகியிடம் கூறிவிட்டு அவரை காண வீட்டிற்கே வந்திருந்தான்.

     ஹாலில் சுந்தரம்-மீனாட்சி அமர்ந்திருக்க, வாசுதேவன் இன்னும் வரவில்லை என்று அறிந்தவன் அவர்களிடம் பேசினான். இங்கு விஷ்ருத் பேசிக் கொண்டிருக்க, வினயின் அறையில் நமது த்ரீ இடியட்ஸ் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

      "எனக்கு அப்பவே டவுட்டு இருந்துச்சுடா... நீ வரப்ப அவ சிரிக்கிறா... அடிக்கடி என்கிட்ட உன்ன பத்தி கேக்குறா... இருந்தாலும் நான் பெருசா எடுத்துக்கல... இப்பதான் தெரியுது எதுக்குன்னு... நாளைக்கு இருக்குடா பானுக்கு... இதுல இந்த எரும மாடும் என்கிட்ட சொல்லல" என்று கூறிக் கொண்டே சக்தியின் முதுகில் அடித்தாள் சஞ்சனா. அவன் முறைத்தான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now