அத்தியாயம் - 33

286 19 2
                                    

சஞ்சனா வீட்டில்...

     விஷ்ருத்தும் இரவு வரை காத்திருந்தான். ஆனால் அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு சஞ்சனாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நாளையே ஊருக்கு சென்றாக வேண்டும், இவளை சமாதானம் செய்துவிட்டால் ஒரு நிம்மதியோடு செல்லலாம் என்றெண்ணினான். ஆனால் சஞ்சனாவோ அவனின் எண்ணத்தை நடக்காமல் செய்துவிட்டாள்.

     பலத்த யோசனையோடு அமர்ந்திருந்த விஷ்ருத் அருகில் அமர்ந்தனர் வினய் மற்றும் சக்தி.

     "டேய் விச்சு...", என்று வினய் அவனை உலுக்கினான். அதில் அவர்களை பார்த்தவன் "எப்படா வந்தீங்க", என்றதும் "நாங்க வந்து பல வருஷம் ஆச்சு", வினய் கூறிவிட்டு "என்ன ரொம்ப நேரமா எதோ யோசிச்சிட்டு இருக்க... வாட் இஸ் த மேட்டர்", என்றான்.

    "ப்ச்... அன்னிக்கி அம்மா சஞ்சனாகிட்ட பேசுனது உங்களுக்கு தெரியும்தானே"

   "ம்க்கும்... கூப்பிட்டு வச்சு சொன்னாங்களேடா... தெரியாமயா இருக்கும்" வினய்.

    "ம்ம்... பாவம் சஞ்சு ரொம்ப பீல் பண்ணிருப்பா", சக்தி கவலையாக கூறினான்.

    "எனக்கும் அவள நினைச்சு தான் ஒரு மாதிரி இருக்குடா... அன்னிக்கி அம்மா உங்ககிட்ட பேசனதுக்கு அப்றம் தான்... அவ என்கிட்ட பேசாததுக்கு காரணமே புரிஞ்சது... இப்ப வரைக்கும் என்னைய கண்டுக்கவே இல்லடா", என்று விஷ்ருத் முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டான்.

    "அதுக்கு இப்ப என்ன பண்ணறது... விடு அவளா வந்து பேசுவா", வினய் சமாதானமாக பேசினான்.

    "அவ பேசுவா... ஆனா எனக்கு இப்பவே பேசனும்... நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவேன்... அவ என்கிட்ட பேசிட்டா ஒரு திருப்தியா இருக்கும்"

    "அய்ய... இதுக்கா இவ்ளோ பீலிங்", என்று சக்தி கூறிவிட்டு "இப்ப பாருங்க", என்றவன் நேராக சஞ்சனாவை அழைத்து வந்து விஷ்ருத் முன் அமர வைத்து, அவள் எழுந்து போகாதது போல் வினயும், சக்தியும் அணைப் போல் இருபக்கமும் அமர்ந்துக் கொண்டனர்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now