அத்தியாயம் - 39

253 12 0
                                    

சஞ்சனாவும், சக்தியும் தொலைக்காட்சியில் பாடலை ஒலிக்கவிட்டு, அலைப்பேசியில் மூழ்கியிருந்தனர்.

"உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே...
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே" என்று தொலைக்காட்சியில் பாடல் ஒலித்தது. அதே நேரம் சஞ்சனாவிற்கு விஷ்ருத்திடமிருந்து அழைப்பு வந்தது.

   இதயம் ஒரு நொடி நின்று துடிக்க, நிமிர்ந்து சக்தியை பார்க்க அவன் கவனம் முழுவதும் போனில் இருந்தது. "எடு" என்று ஒரு மனம் கூற, "வேண்டாம்" என்றது இன்னோரு மனம். அவள் எடுப்பதற்குள் அழைப்பு நின்றுவிட, ஒரு பெருமூச்சுவிட்டாள். ஆனால் அவனுக்கு மீண்டும் அழைக்கவில்லை.

    அங்கு விஷ்ருத்தோ அவள் அழைப்பை ஏற்காததால் ஏமாற்றத்துடன் இருந்தான். தன் காதலி அழைப்பை ஏற்காத கோபம். ஆம், விஷ்ருத்தும் சஞ்சனாவை காதலிக்க தொடங்கியிருந்தான். ஆனால் நமது நாயகியை போலவே சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறான்.

      அன்று தேவகியிடம் அவளை காதலிக்கவில்லை என்று வாய் கூறிய பொய்யை மனம் ஏற்கவில்லை. தேவகியிடம் சஞ்சனாவிற்கும் தனக்கும் எதுவுமில்லை என்று அவரிடம் வாதாடிவிட்டு அறைக்கு வந்தவன் மனதில் கேள்வி அலைகள்.

    அதற்கு எல்லாம் அவனுக்கு பதிலாக கிடைத்தது சஞ்சனா மீது அவன் கொண்ட காதல். மனதின் பதிலில் திகைத்தான்.

    "அவளின்றி ஒரு வாழ்க்கையை உன்னால வாழமுடியுமா???", மனம் கேட்ட கேள்விக்கு "அதற்காக அதை காதல் என்று எவ்வாறு கூறமுடியும்" என்றான்.

    "உன்னோட சுக துக்கத்தை அவளிடம் பகிர்ந்திட்டாய்... ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று குறிப்பிட்டாயே... அது எதனால் காதல் இல்லாமலா", என்று மனம் வாதிட, "அது பெயர் நட்பு" என்று அடித்துக் கூறியவனை கண்டு மனம் நகைத்தது.

    "அப்படியெனில் ஒரு மாதமாக அவளிடம் பேசாமல் தவித்தாயே அதன் பெயர் நட்பா...??"

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now