அத்தியாயம் - 21

341 16 0
                                    

        மாலை கல்லூரி முடிந்ததும் நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டான் அதிரதன் அவனுடன் ராதிகாவும் வந்திருந்தார்.

     விடியற் காலையில் வீட்டிற்கு வந்த மகனை ராதிகா சற்று பதட்டத்துடனே என்னவென்று கேட்க ஜான்சி பற்றியும் அவள் வீட்டில் இப்போது யாரும் இல்லை என்று நிலையை கூறி ராதிகா மூலமே நர்ஸை ஏற்பாடு செய்திருந்தான்.

    ஜான்சி அனுமதிக்கப்பட்ட அறைக்குள் இருவரும் செல்ல, அதிரதனை கண்டதும் முகம் மலர்ந்தாள். ராதிகாவை கேள்வியோடு பார்த்தாலும் அவரை புன்னகையுடன் எதிர்கொண்டாள்.

      "ஜான்சி! இவங்க என்னோட அம்மா ராதிகா. இவங்களும் இங்க தான் வொர்க் பண்றாங்க, முக்கியமான டாக்டர்கள்ல இவங்களும் ஒருத்தங்க."

      "வணக்கம் ஆன்ட்டி!"

    அவள் அருகில் அமர்ந்த ராதிகா, "சாப்டாச்சாமா? இப்ப பரவாயில்லயா?", என்க

     " ம்ம் சாப்டாச்சு. இப்போ பரவாயில்ல ஆன்ட்டி. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி! பட் என்னால உங்களுக்கு வீண் சிரமம்ன்னு தோணுது...", என்று ஜான்சி கூற,

    ராதிகா "இதுல என்னம்மா சிரமம்... நீயும் என் பொண்ணு மாதிரிதான்... இந்த மாதிரிலாம் பேசாத" என்றதும் தலையாட்டினாள் ஜான்சி.

      "சரிம்மா! டியூட்டி இருக்கு நான் கிளம்பறேன், ப்ரீ ஆனதும் உன்ன வந்து பாக்குறேன்! வரேன்", என்று ஜான்சியின் தலையை வாஞ்சையுடன் கோதிவிட்டு சென்றார் ராதிகா.

     ராதிகா சென்றதும் அதிரதன் அவள் அருகில் வந்தமர்ந்தான்.

      "அதி! எங்கம்மா சீக்கிரமே வர பாக்குறேன்னு சொல்லிருக்காங்க. அங்க ஏதோ பிரச்சனையாம் அதனால அம்மா அங்கயே இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிடுச்சு, நீங்க வாங்கி கொடுத்த போன்ல தான் பேசுனேன். அப்றம் ரொம்ப நன்றிங்க நீங்க வாங்கி தந்த எல்லாத்துக்கும்! உங்களுக்கும் உங்கம்மாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்!", என்று மனநிறைவுடன் கூறினாள் ஜான்சி. அதிரதன் எதுவும் கூறாமல் புன்னகைத்தான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now