அத்தியாயம் - 35

263 15 0
                                    

கனடாவில்....
      
    இன்று வேலையை விடுப்போவதை பற்றி தனது கம்பனியில் கூறினான் விஷ்ருத். அவனின் திறமையயும், உழைப்பையும் விடுவதற்கு      அவர்களுக்கு மனமே இல்லை. ஆனால் மறுக்கவில்லை. அவன் நினைத்தது போலவே வேலையை விட்டுவிட்டான்.

    எதிரே அவனை பார்த்துக் கொண்டு கவலையாக நின்றிருந்தான் ராகவ். நண்பனை பார்த்ததும் விஷ்ருத்திற்கும் கவலையாகிவிட்டது. அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். ஒரு சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தனர். நண்பனைவிட்டு பிரியப்போவதால்... பிரிவின் துயரம் இருவரையும் வாட்டியது.

     "மச்சி நமக்கு பீலிங்ஸ்... செட் ஆகலடா...", என்று ராகவ் சிரிப்புடன் கூறினாலும். மனம் வேதனையாக தான் இருந்தது.

    "ராகவ்... மிஸ் யூ மச்சான்...", என்றபடி அணைப்பிலிருந்து விலகி... அவனை பார்த்து புன்முறுவல் செய்தான்.

    இருவர் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது.

    "மாமியார் வீட்டுக்கு பொண்ண அனுப்பி வைக்கிற மாதிரி பீலிங்கா இருக்குடா...", ராகவ் கூற, விஷ்ருத் பட்டென சிரித்தான்.

    "மச்சி லீவ்ல... கண்டிப்பா தங்கச்சியோட ஊருக்கு வாடா" என்று விஷ்ருத் அன்பு கட்டளையிட "கண்டிப்பாடா...", என்று ராகவ் கூறினான். சிறிது நேரம் பேசிவிட்டு விடைப்பெற்று வீட்டிற்கு வந்தான்.

    ஒரு வாரத்தில் இந்தியா வந்தடைந்தனர் விஷ்ருத் மற்றும் தேவகி. அவர்களுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தனர் வாசுதேவன் மற்றும் வினய்.

சென்னையில்....

      காற்றைப் போல், வேலியற்ற பறவையைப் போல், வானத்தை முட்டிக் கொண்டு நிற்கும் மேகங்கள் இடியுடன் கூடி மழைத்துளியை மென்மையாக மண்ணில் தெளிப்பது போல், உலா வரத் தொடங்கினான் விஷ்ருத்.

     தனது தந்தையுடன் இனி எப்போதுமே இருக்கப்போவது மகிழ்ச்சி அளித்தது.

     "ப்பா..." என்று அழைத்துக் கொண்டே வாசுதேவனை நெருங்கினான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now