அத்தியாயம் - 51

245 10 0
                                    

அதிரதன் உணர்ச்சியின்றி ப்ளைட் சீட்டில் அமர்ந்திருக்க, சோகம் வடியும் முகத்துடன் அவனருகில் அமர்ந்திருந்தாள் ஜான்சி. இனிமையாக தொடங்கிய பயணம் இறுதியில் இப்படி போய் முடிய வேண்டும் என்பது விதி போல...

     அதிரதன் ஜான்சியின் கைகளை பற்றிக் கொள்ள, வெடுக்கென்று தன் கையை விலக்கிக் கொண்டாள். இருவரின் மனதிலும் காலையில் நடந்தது தான் படமாக ஓடியது.

     அதிரதன் தங்கியிருக்கும் ஹோட்டல் ரூமில்...

    இன்று கிளம்ப வேண்டும் என்பதால் நேற்றைய தினமே சஞ்சனா, விகாஸ் மற்றும் ரஞ்சிதாவிடம் கூறிவிட்டான். அவர்களும் இன்னும் இரு தினங்களில் புறப்பட உள்ளனர்.

    ஜான்சி பேக் செய்தவற்றை ஒரு முறை சரி பார்த்து கொண்டிருக்க, அதிரதன் குளியலறையிலிருந்தான்.

   அவனது அலைப்பேசி ஒலிக்கவும், "அதி போன் அடிக்கிது... ஆபீஸ் கால்னு வருது", என்று குரல் கொடுத்தவளிடம், "இரு வரேன்", என்று தலையில் ஈரம் சொட்ட இடுப்பில் துண்டுடன் வெளியே வந்தவன், வேகமாக அவளிடமிருந்து அலைப்பேசியை வாங்கி பேசத் தொடங்கிட, அவன் வாங்கிய வேகத்தில் போன் நழுவி கீழே விழப் போக, "ஐயோ... ஈரமா வந்துட்டு ஏன் இப்டி பண்றீங்க", என்றவள், அவன் தடுப்பதை பொருட்படுத்தாது, அவன் பேசுவதற்கு வாகாக போனை அவன் காதில் வைத்தாள்.

     "சார் ரூபா ஹியர்", என்றவளிடம் "ஹாங்... சொல்லு ரூபா", என்றான்.

    "சார் நீங்க சொன்ன பார்மாலிட்டீஸ் முடிஞ்சது சார்... மேடம் சைன் பண்ணா போதும்... நீங்க என்னிக்கி வருவீங்க", என்றாள் ரூபா. அதிரதன் முகத்தில் ஒரு நொடி அதிர்ச்சி. அருகில் ஜான்சி இருப்பதால், "ரூபா... நான் வந்த பிறகு ஆபீஸ்ல மத்தத பாத்துக்கலாம்... வைச்சிறேன்", என்றிட, அவனிடமிருந்து போனை எடுத்து அழைப்பை துண்டித்தாள் ஜான்சி.

     அவன் எதுவும் கூறாமல் தயாராக செல்ல, இங்கு ஜான்சி குழம்பினாள் 'யார் அந்த மேடம்' என்று.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now