அத்தியாயம் - 42

274 11 0
                                    

   "விஷ்ருத்... தேவகி அத்தை உட்பட... நம்ம வீட்ல எல்லாரோட சம்மதத்தோடவும்... நம்மளுக்கு கல்யாணம் நடக்குமா?... அப்டி கண்டிப்பா நடக்கும்ன்னு நீ சொல்லு... அப்போ உன் காதலை நான் ஏத்துக்கிறேன்... இல்லைன்னா... உன்னோட காதலையும்... என்னையும் விட்ரு", என்று இறுகிய குரலில் கூறினாள் சஞ்சனா.

   அவள் சொன்னதை கேட்டு விஷ்ருத் முதலில் திகைத்து, மறுநொடியே ஏதோ புரிந்தது போல் முகம் பிரகாசிக்க அவளிடம், "அப்டினா சனா... உனக்கும் என்னைய பிடிக்குமா... நீயும் என்ன...", என்றவனிற்கு அதற்கு மேல் பேச்சு வராமல் அவளையே பார்க்க, அவள் கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது.

    "சனா... அழுகிறயா", என்றபடி தன் கரம் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்த போக, அவள் சட்டென தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ஏமாற்றத்துடன் தன் கரத்தை பின் வாங்கியவன், தன்னை சமன் படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினான்.

     "சனா... நீ சொல்ற மாதிரி நம்ம கல்யாணம் நடக்கும்னு... என்னால உன்கிட்ட பொய் சொல்ல முடியாது... ஆனா... உனக்கு அது தான் சந்தோஷம் தரும்ன்னா... கண்டிப்பா நான் அதுக்காக முயற்சி செய்வேன்... ஒருவேள அப்டி நடந்தா என்னைய ஏத்துப்பியா", என்றவனிற்கு மௌனத்தையே பதிலாக தந்தாள்.

   "மௌனம் சம்மதமா", என்று விஷ்ருத் சிரிப்புடன் வினவிட அதற்கும் அவளிடம் பதில் இல்லை. ஒரு பெருமூச்சுவிட்டு வாகனத்தை கிளப்பிக் கொண்டு சஞ்சனாவை அவளது அலுவலகத்திலே இறக்கிவிட்டான்.

      "இன்னிக்கி என் காதலியா இந்த ப்ளூ டெவில்ல இருந்து இறங்கற... திரும்பவும் என் மனைவியா உன்ன இதே ப்ளூ டெவில்ல கூட்டிட்டு போவேன்... பை டார்லிங்", என்று மந்தகாசப் புன்னகையுடன் கண்ணடித்துவிட்டு விஷ்ருத் செல்ல, அவன் கண்ணைவிட்டு மறையும் வரை நின்று பார்த்தாள் சஞ்சனா.

ஆர்.வி கம்பனி....

    அடுத்து நேராக ஆர்.வி கம்பனிக்கு வந்தான் விஷ்ருத். அவன் வந்ததை அறிந்து, வாசுதேவன் அழைத்தார். அவரது அறைக்கு வந்தவன் "சொல்லுங்க டாட்", என்று இலக்கற்று வெறித்தான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now