அத்தியாயம் - 23

288 17 0
                                    

          சென்னையில்.... 

    விஷ்ருத், வினய், சக்தி மூவரும் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் கேரம், செஸ் கார்ட்ஸ் என்று விளையாடிப் பொழுதை போக்கினர். இருந்தாலும் சஞ்சனா இல்லாமல் வெறுமையாக இருந்தது போல் தோன்றியது.

    டெல்லி மாநகரத்தில் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குள் தனக்கான அறையில், தன் தாய் சத்யா கூறியதை உண்மையாக்குவது போல் காலை விடிந்தும் இன்னும் எழாமல் போர்வைக்குள் முகத்தை மூடி தூங்கிக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

   அவள் கட்டிலுக்கு அருகில் உள்ள மேஜையில் இருந்த அவளது அலைப்பேசி ஒலிக்க, அரைத் தூக்கத்திலே அதை எடுத்தவள் காதில் வைத்து, "தாங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தற்போது எனர்ஜி சேவிங் மோடில் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து அழைக்கவும்" என்று உளர அந்த பக்கத்திலோ "ஹாஹாஹா... சனா..." என்று சிரிப்பொலி கேட்டது. பட்டென எழுந்தவள் திரையில் மிளிர்ந்த விஷ்ருத் பெயரை பார்த்து தலையடித்துக் கொண்டாள்.

    "ஈஈஈ... குட் மார்னிங் விஷ்ருத்"

   "குட் மார்னிங் சனா... தூக்கம் போச்சா?"

   "ஏன் விஷ்ருத்! இப்டி காலங்காத்தால போன் பண்ணி எழுப்பிவிட்டுட்டு, தூக்கம் போச்சான்னு மனசாட்சியே இல்லாம கேக்குறீயா, இதெல்லாம் நியாயமா?"

    "நியாயமில்ல தான் சனா. ஆனா மீட்டிங் இருக்கே!"

    "இருக்குதான்..."

    "அப்ப ரெடியாக வேணாமா?"

   "இந்த சஞ்சனாவ என்ன? காலையில லேட்டா எழுந்து, அவசர அவசரமா ரெடியாகி, பத்தும் பத்தாம சாப்பிட்டு, அப்றமா சினேக்ஸை தேடி தேடி சாப்பிடுறவன்னு நினைச்சியா? எத்தன மணிக்கு எழுந்தாலும் கடிகாரத்தோட போட்டி போட்டு மின்னல் வேகத்துல ரெடியாகுற சஞ்சனா நான்!"

   "ஏன்டி, பஞ்சரான பஞ்ச் டயலாக்க பேசி பேசியே டைம் ஓட்டுவியா?", என்று வினயின் குரலோடு, "ம்க்கும். இந்த மூஞ்சி கடிகாரத்தோடு போட்டி போடுதாம்", என்று சக்தியின் குரலும் கேட்டது.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Donde viven las historias. Descúbrelo ahora