அத்தியாயம் - 14

403 16 0
                                    

        வினய் தனக்கு எதிரில் நின்றிருப்பது விஷ்ருத் தான் என்பது தெரிய "விஷ்...", என்று உற்சாகமாக அழைத்தவன் பாதியிலே நிறுத்திவிட்டான்.
    
   வனுக்கு அன்றைய நாளில் நடந்தது கண்முன் விரிந்தது. வினய், சக்தி மற்றும் சஞ்சனா. மூவரின் பெற்றோர்களும் வந்திருந்த நாளன்று. வினய் மற்றும் சஞ்சனாவின் திருமணத்தை பற்றி பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்த சமயம், வாசுதேவன் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்ததை வினயும் சஞ்சனாவும் கவனிக்க தவறவில்லை.

   'வேலை பற்றி எதாவது இருக்கும்', என்று எண்ணினர். அதற்குப் பின் இருவரின் திருமணத்தை பற்றிய பேச்சு முடிவுக்கு வர, வினயை கிள்ளிவிட்டு சஞ்சனா தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

    சிறிது நேரத்தில் அவளை தேடி அறைக்கு வந்த வினய், அவள் அங்கு இல்லாததால் மாடிக்கு செல்ல அங்கு சஞ்சனாவும் வாசுதேவனும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இவனை அங்கு எதிர்பார்க்காதவர்கள் உடனே பேச்சை மாற்றினர். அதை வினய் கண்டுக்கொண்டான் என்பதை இருவரும் அறியவில்லை.

   பின் கீழே வந்து அவரவர் அறைக்கு செல்ல, வாசுதேவன் அவர் அறைக்கு சென்றுவிட்டதை உறுதிபடுத்திய வினய், வேகமாக சஞ்சனாவின் அறைக்குள் நுழைந்தான். தலையணையில் முகம் புதைத்து அழுதுக்கொண்டிருந்தவள் ஆள் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, அங்கு வினயை கண்டவள் தன் கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டாள்.

     "வினய்! நீயென்டா இங்க வந்த? ஏற்கனவே கல்யாண பேச்சு ஓடிட்டு இருக்கு! இதுல நீ இப்டி பண்றத பார்த்தா அவ்ளோதான் நாளைக்கே நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க?", என்று பொறிந்து தள்ளினாள்.

    வினய் அவள் பேசியதை பொருட்படுத்தவில்லை.

   "நீயும் பெரியப்பாவும் என்ன பேசிட்டிருந்தீங்க? இப்ப வேற அழுதுட்டு இருக்க? எங்கிட்ட எதாவது மறைக்கிறியா? உன்னதான்டி கேக்குறேன் வாயதொறந்து எதாவது பேசு", என்று நேரடியாக கேட்டான். அவள் தோளை பிடித்து உலுக்க, அவன் கேட்டதில் அடக்கிவைத்த அழுகையை மீண்டும் தொடர்ந்தாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now