அத்தியாயம் - 29

315 14 0
                                    

         அதிரதன், ராதிகா இருவரும் டெல்லிக்கு வர அவர்களுக்காக டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தார் லோகநாதன்.

    அதிரதன் அவரை அங்கு எதிர்பார்க்கவில்லை. அவரை நெருங்கியவன் "எப்டி இருக்கீங்க மாமா", புன்னகையுடன் வினவினான்.

      "நல்லாயிருக்கேன் மாப்பிள்ளை" என்று சிரித்தார். ராதிகாவை பார்த்து பரஸ்பரமாக பேசி முடிக்க, "நாங்க ஹோட்டல்லயே தங்கிக்கறோம் மாமா", என்று அதிரதன் சொன்னதும்,

    "என்ன அதி நீங்க இப்டி சொல்லிட்டீங்க... நம்ம வீட்ல தான் தங்கனும்... நம்ம வீடு இருக்கிறப்ப ஹோட்டல் எதுக்கு... நீங்க நம்ம வீட்ல தங்குறீங்க அவ்ளோதான்", என்று லோகநாதன் பேச்சை முடித்தார். ராதிகாவும் அதிரதனிடம் சரி என்பதாக கண்ணசைக்க, அதிரதன் ஒப்புக்கொண்டான்.

      வீட்டை அடைந்ததும் இருவருக்கும் அவர்கள் தங்க வேண்டிய அறையை காட்டி, ப்ரெஷ் ஆகிவிட்டு சாப்பிட வருமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். வீட்டில் பெரிதாக சொந்தங்கள் இல்லை. ஒரு சில பேர் மட்டுமே இருந்தனர்.

      அதிரதன் சாப்பிட்டு முடித்ததும் அசதியில் தூங்கிவிட்டான். இங்கு ராதிகா லலிதாவுடன் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் சம்மந்தி என்பதை தாண்டி ஏற்கனவே சந்தித்து பழகியிருந்ததால் நட்போடே உரையாடல் இருந்தது.

   அதிரதன் எழுந்ததும் வெளியே வந்து பார்க்க வானம் மங்கி இருள் வீசியது. இரவாகிவிட்டது என்பது புரிந்தது. அவனது கண்களோ ஜான்சியை தேடியது. மெல்ல எழுந்து வெளியே வர எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஜான்சியின் வீட்டிற்கு ஏற்கனவே வந்தவனாயிற்றே அதனால் அவள் அறைக்கு சென்றான். ஏமாற்றம். அவள் அங்கு இல்லை. யோசனையாக மாடிக்கு சென்று பார்த்தான். அங்கு விஷ்ருத்தும் ஜான்சியும் பேசிக் கொண்டிருந்தனர்.

      அதிரதனை பார்த்ததும் விஷ்ருத் ஜான்சியிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அதிரதனை அழைத்தான்.

     "வாங்க வாங்க மாப்ள சார்... எப்டி இருக்கீங்க... இங்க உங்க புராணம் தான்... மேடம் வாய் வலிக்க பேசி தள்ளிட்டாங்க", என்று விஷ்ருத் சிரித்தான். ஜான்சி அவனை பொய்யாக முறைத்தாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Tahanan ng mga kuwento. Tumuklas ngayon