அத்தியாயம் - 25

325 16 0
                                    

          ஜான்சி செல்வதை பார்த்த சஞ்சனாவும், சிவாவும் குழப்பத்துடன் ஹோட்டலிற்குள் வந்தனர். அவர்கள் தங்களது அறையை நோக்கி போக, அதிரதன் இருவரையும் பார்த்தபடி வந்தான்.

     "உங்க ரெண்டுபேரையும் பாக்க தான் வந்தேன் சரியா நீங்களே வந்துட்டீங்க. சாரி காய்ஸ்! உங்கள அங்கயே விட்டுட்டு வந்துட்டேன்.", என்ற அதிரதனிடம் "ப... பரவாயில்ல சார்!" என்றனர் புன்னகையுடன்.

    "எதாவது பிரச்சனையா சார்?", என்று சஞ்சனா கேட்டதும், அதிரதன் மறுப்பாக தலையசைத்து "நத்திங் சஞ்சனா!", என்று சிரித்தான். அதே நேரம் அவனுக்கு அழைப்பு வர தனதறைக்கு சென்றுவிட்டான்.

    "அதான் அவரு எதுவும் பிரச்சினை இல்லைன்னு சொல்லிட்டாருல... அப்றம் என்ன யோசிச்சிட்டு இருக்க?"

    "ஈஈஈ... ச்சே ச்சே... அப்டிலாம் எதுவும் இல்ல சிவா... நான் வரேன்", என்று கூறிவிட்டு சென்ற சஞ்சனாவை பார்த்த சிவா தோளை குலுக்கிவிட்டு தன் அறைக்கு வந்துவிட்டான்.

    குழப்பத்துடனே தனதறைக்கு வந்த சஞ்சனா... அதே யோசனையுடனே அமர்ந்திருக்க, சரியாக அந்நேரம் விஷ்ருத் அழைத்தான்.

    "ஹலோ... விஷ்ருத்"

   "என்ன சனா... வாய்ஸே சரியில்ல... என்னாச்சு?", என்று விஷ்ருத் கூற 'குரலை வைத்த கணித்துவிட்டானே' என்று ஆச்சரியம் அடைந்தாள் சஞ்சனா.

    "இல்ல விஷ்ருத்... யோசனையா இருந்தேனா... அதனால வாய்ஸ் அப்டி கேட்டிருக்கும்"

     "என்ன பத்திதானே", என்றவன் கூறியதும் திடுக்கிட்டவள் "என்னது?" என்றாள்.

     "இல்ல சனா... என்ன பத்தி யோசிச்சிட்டு இருந்தியான்னு கேட்டேன்?"

     "இல்லயே!"

     "அப்ப என்ன பத்திலாம் நினைக்கமாட்டியா? நான் மட்டும் தான் உன்ன பத்தியே நினைச்சிட்டு இருக்கேன் போல..."

     'என்னடா இது... எல்லாம் கனவோ... விஷ்ருத்தா இப்டி பேசுறது... ஒருவேள நம்ம கற்பனையோ?", என்று நினைத்தவள் "விஷ்ருத்" என்று கத்த அந்த பக்கம் கேட்டவனிற்கு காது கிழியாது குறை தான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now