அத்தியாயம் - 08

502 20 0
                                    

     ரு வாரம் சென்றுவிட்டது. இன்று அதிரதன் ராதிகாவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். மருத்துவர் சொன்ன அறிவுரைகளையும், மருந்து மாத்திரைகளையும் சேர்த்து. 

      ஹால் சோபாவில் ராதிகா அமர்ந்திருக்க அவருடன் அமர்ந்திருந்தான் அதிரதன்.

      "நீங்க வந்த பிறகு தான் இந்த வீடு  வீடு மாதிரி எனக்கு தோனுதும்மா! இந்த ஒரு வாரமும் ஏதோ காட்டுல இருந்த மாதிரி இருந்துச்சு", என்று அதிரதன் ராதிகாவை தோளோடு அணைத்துக்கொண்டான்.

      "ம்க்கும்! பொய் பொய்... வாய திறந்தா பொய்", என்று அவன் கன்னத்தில் வலிக்காமல் அடிப்பது போல் தட்டினார்.

     "அம்மா! நான் என்ன பொய் சொன்னேன், அத நீங்க கண்டுபிடிச்சீங்க?", என்று அவரை செல்லமாக முறைத்து, முகத்தை திருப்பிக் கொண்டான்.

     "பின்னே இல்லயா? ஒரு வாரத்தில் காலையில ஆபீஸ். நைட்டு என்கூட ஹாஸ்பிட்டல்ல இருக்க. இதுக்கு நடுவுல மிஞ்சிப்போனா அரைமணி நேரம் வீட்ல இருப்ப. இதுக்கு ஏதோ காட்டுல இருந்த மாதிரி இருந்துச்சுன்னு வசனம் வேற!", என்று ராதிகா அதிரதன் முகத்தை தன்புறம் திருப்பினார்.

      அவன் முறைத்துபடியே இருப்பதை பார்த்தவர் "டேய் சிரிடா..." என்றார். இன்னும் முறைத்தான்.

    "சும்மா சொன்னேன்டா! உன்ன பத்தி எனக்கு தெரியாதா"

    "விளையாட்டு? ம்ம்...!", என்று கண்களை சுருக்கி கோபமாக இருப்பது போல் பார்த்தான்.

    அவரும் அவனைப் போலவே செய்ய, பட்டென சிரித்துவிட்டான். ஆதுரமாய் அவன் தலையை கோதியவர், "டைம் ஆச்சுடா சாப்பிடலாம் வா" என்றார்.

    "இல்லம்மா ஆபீஸ் கிளம்புறேன்" என்று எழுந்தவனை, தடுத்து கையோடு உணவு மேஜையில் அமரவைத்து ஊட்டியும் விட்டார். அவனும் அவருக்கு ஊட்டினான்.

     பின் இருவரும் சாப்பிட்டதும், ராதிகாவின் மாத்திரையை எடுத்து கொடுக்க, அதை அவர் வாயில் போட்டுக் கொண்டதும் தண்ணீர் கொடுத்தான். அவரை பார்த்தது "குட்... இதே மாதிரி மதியமும் சாப்பிடனும்", என்று புன்னகைத்தவன், "அம்மா! டேபிள் மேல மாத்திரை வச்சிருக்கேன். ஞாபகமா மதியமும் சாப்பிட்ட பிறகு போட்டுக்கோங்க", என்றுவிட்டு,"பை... ம்மா" என்று அவரை அணைத்து விடுத்தான். காரில் கிளம்பியவன், அலுவலகம் வந்து இறங்கினான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now