அத்தியாயம் - 44

266 13 0
                                    

டெல்லி....

     வாசலில் தோரணம், விளக்குகள் என்று அலங்கரிக்கப்பட்டிருக்க, அதிரதன் வெட்ஸ் ஜான்சிராணி என்று மலர்களால் எழுதியிருந்த பெயர் பலகை அனைவரையும் வரேவேற்றது.

    உள்ளே சொந்த பந்தங்கள், நட்புகள் சூழ்ந்திருந்தனர். மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் கல்யாண மாப்பிள்ளைக்கு உரித்தான பொலிவுடன் அதிரதன் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் ஜான்சியை அழைக்க, பெண்கள் புடை சூழ, அன்ன நடையிட்டபடி அவன் அருகில் வந்து அமரந்தாள்.

    லோகநாதன், லலிதா, ராதிகா, வாசுதேவன், தேவகி, விஷ்ருத், வினய், சக்தி என அனைவரும் மேடையில் குழுமியிருந்தனர்.

     சில சம்பிரதாயங்களிற்காக ஜான்சியின் அத்தையை அழைக்க தேவகி முன்வந்தார். ஐயர் ஏதோ சடங்கு முறையை சொல்ல அதை கேட்டவருக்கு அதிரிச்சி தான்... கணவனோட சேர்ந்து செய்ய வேண்டுமாம்.

    மறுக்கமுடியாத நிலையில் இருக்கிறார். தன்னால் எந்த சங்கடமும் நிகழக் கூடாது என்று தேவகி உணர்ந்து, வாசுதேவன் எங்கு என்று கண்களால் தேடினார். ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த வாசுதேவனை அருகில் சென்று "வாசு", என்று அழைத்தார். பரிச்சயமான குரல், ஆனால் ஆண்டுகள் கழித்து கேட்கும் குரல்... செவி தாண்டி, இதயத்தில் விழுந்தது. அதே உணர்வோட திரும்பியவர் முன் தேவகி நின்றிருந்தார்.

     விஷ்ருத் மட்டுமல்ல வினய், சக்தி, லோகநாதன், லலிதா அனைவரும் ஆச்சிரயமாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

     வாசுதேவனுடன் மேடை ஏறினார் தேவகி. விஷ்ருத்தின் மொபைல் அவர்களை ரகசியமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது.

     இருவரும் ஒன்றாக இணைந்து நின்றனர். இருவருக்குமே ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. கண்கள் ஒருவரை அறியாது ஒருவர் தீண்டியது. பின் இருவரும் செய்ய வேண்டிய சடங்குகள் முடிய, அதன் பின் லோகநாதன் மற்றும் லலிதா சேர்ந்து கன்யாதானம் செய்தனர்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now