அத்தியாயம் - 27

383 15 0
                                    

          அப்படி இப்படி என நாட்கள் ரயில் வேகத்தில் சென்று அதிரதன் ஜான்சியின் நிச்சயதார்த்தத்திற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக வந்து நின்றது.

   சஞ்சனாவை அழைக்க சொல்லி வினயிடம் மீனாட்சி சொன்னார். அவளறைக்கு செல்ல உறங்கிக் கொண்டிருந்தாள். சரி என்று திரும்பியவனை சஞ்சனாவின் அலைப்பேசி ஒலி தடுத்தது. எடுக்கலாமா? வேணாடாமா? ஒருவேள முக்கியமான போனா இருக்குமோ என்று குழப்பத்துடன் எடுக்கப்போக அதில் விஷ்ருத்தின் பெயர் மிளிர்ந்தது. உடனே எடுத்தான் வினய்.

     "டேய் ப்ரோ... எப்டிடா இருக்க", என்று வினயின் குரல் கேட்டதும். ஏமாற்றமடைந்தான் விஷ்ருத் அதை வெளிக்காட்டாவில்லை.

   "ஹ்ம்ம்... நல்லாயிருக்கேன்டா... நீ எப்டி இருக்க", வினய் கேட்க 'நிம்மதியே இல்லாம இருக்கேன்' என்று மனதில் நினைத்தவன் "பைன் டா" என்றான்.

    "விச்சு சஞ்சனா தூங்கிட்டிருக்கா... எதாவது முக்கியமான விஷயமா"

    "இல்ல வினய்..." என்று நிறுத்தியவன் சிறிது இடைவெளி விட்டு "சரிடா... நான் அப்றம் கால் பண்றேன்", என்க "விச்சு... சஞ்சனா எழுந்ததும் உனக்கு போன் பண்ணி பேச சொல்றேன்... பை... டா", என்று இருவரும் அழைப்பை துண்டித்தனர்.

     வினய் கீழே சென்றதை உறுதிபடுத்தியவள் தன் இமைகளை பிரித்தாள். நிற்காமல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். மீண்டும் கண்முன் தோன்றியது அன்று நடந்தது.

    "ஹலோ... விஷ்ருத்... சாரி... போன் சைலன்ட்ல போட்டதையே மறுந்துட்டேன்... இப்போ தான் பாத்தேன்"

      "......"

     "ஹலோ... விஷ்ருத்... எதாவது பேசு... ஹலோ", 'என்னடா இது' என்று திரை பார்க்க அவன் லைனில் இருப்பதாக காட்டியது.

     "சஞ்சனா" என்று தேவகியின் குரல் கேட்க ஒரு நொடி திகைத்து தான் போனாள்.

     "அ... அத்த... அத்தை எப்டி இருக்கீங்க", என்று சஞ்சனா சாதாரணமாக இருப்பது போல் பேசினாள்.

     "இப்ப வரைக்கும் நல்லாதான் ம்மா இருக்கேன்... இதுக்கு மேல நான் நல்லாயிருக்கிறது உன் கையில தான் இருக்கு"

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now