அத்தியாயம் - 49

239 11 0
                                    

அதிரதன் வீட்டில்...

       ஜான்சி அதிரதன் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருக்க, குளித்து முடித்து வெளியே வந்தவன் அவளை கண்டுக் கொள்ளாமல், ஏதோ அந்த அறையிலே அவன் மட்டுமே இருப்பது போல் விசிலடித்தபடியே கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டிருந்தான்.

     அதில் மேலும் கடுப்பான ஜான்சி, மொத்த கோபத்தையும் வார்த்தைகளால் காட்டத் தொடங்கினாள்.

     "அதி நீங்க பண்றது ரொம்ப ஓவரா இருக்கு... ஜஸ்ட் ஒன் ஹவர் உங்கள நான் பாக்கலைங்கிறதுக்காக இவ்ளோ கோவப்படறீங்க... நீங்க என்கிட்ட ஒரு வாரமா சரியா பேசல தெரியுமா... ஆபீஸ் வேலைன்னு நீங்க என்னை கண்டுக்காம தானே இருக்கீங்க... இதுல இவரு என்மேல கோச்சிக்கிறாரு", என்று கத்தினாள்.

      அவள் அருகில் வந்தவன் "இங்க பாரு... உனக்கு என்கூட தானே சண்டை போடனும்... என்கிட்ட மட்டும் கத்து... இந்த அறைய தாண்டி சத்தம் வெளியே போகக்கூடாது", என்று எச்சரித்தான்.

    "ஓஹோ... கத்துறேனா... சண்டை போடறேனா... ஆமா உங்களுக்கு நான் சண்டைக்காரி மாதிரி தான் தெரிவேன்", என்று கூறிக்கொண்டே அவனை பார்த்தாள். அவன் கையை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தான்.

     "பேசாதீங்க... பேசிடவே பேசிடாதீங்க... எல்லாருமே கோவம் வந்தா கத்துவாங்க... இவரு மட்டும் வித்தியாசமா பேச மாட்டாரு... உங்கள ஏன் கல்யாணம் பண்ணோம்னு இருக்கு... எங்கப்பா அப்பவே இந்த பையன் வேண்டாம்னு சொன்னாரு... நான் தான் உங்க மேல காதல் பைத்தியமாகி... கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இப்ப பாருங்க நான் உங்களுக்கு பைத்தியம் மாதிரி தெரியுறேன்... ஆபீஸ கட்டிகிட்டு அழுகறவருக்கு எதுக்கு கல்யாணம் குடும்பம் எல்லாம்... ச்சே", என்று ஆத்திரத்தில் பேசினாள்.

    அதிரதன் அவள் அருகில் வந்து பொறுமையுடன், "நீ உனக்கு பிடிச்ச மாதிரி தானே இங்க இருக்க... நான் என்ன குறை வச்சேன் உனக்கு... சொல்லு", என்று அவளது தாடை பிடித்து நிமிர்த்தினான். பட்டென அவனது கையை தட்டிவிட்டாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now