அத்தியாயம் - 56

301 12 0
                                    

மாலை சக்தியும் சஞ்சனாவும் வீட்டிற்கு வந்தனர். மீனாட்சி கோவில் சென்றிருக்க, சுந்தரம் இன்னும் வரவில்லை. விஷ்ருத் மற்றும் வாசுதேவன் இருவருமே அலுவலகத்தில் இருந்தனர்.

     இருவரும் உடைமாற்றி வர, தேவகி இருவருக்கும் காபியும், சாப்பிட பலகாரங்களும் எடுத்து வந்தார்.

     இருவரும் சாப்பிட்டு முடிக்க, சக்தி வெளியே சென்றுவிட, சஞ்சனா தேவகியை காண கிட்சனுக்கு சென்றாள்.
   
     "அத்தை", என்றபடி உள்ளே வந்தவளை கண்ட தேவகி, "என்னம்மா...", என்று கேள்வியாக பார்த்தார்.

    "சும்மா தான் அத்தை... உங்ககிட்ட பேசலாம்னு", என்றதும் இருவரும் ஹாலுக்கு வந்து அமர்ந்தனர்.

   "சரி என்ன பேசலாம் சொல்லு", என்றவரிடம், "அது நான் கேட்டா திட்ட மாட்டீங்கள்ல", என்று தயக்கத்துடன் அவரை பார்க்க, அவர் சிறு புன்னகையோடு, "நீ கேளு", என்றார்.

    "விஷ்ருத்த நான் ஏமாத்த மாட்டேன்னு உங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சா", என்று அன்றைய நாளில் அவர் இவளிடம் கூறிய வார்த்தைகளை வைத்தே கேட்டாள்.

    இது மாதிரி அவள் எதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தவர் தான்... ஆனால் இப்படி கேட்பாள் என்று அவர் நினைக்கவில்லை.

     ஒரு பெருமூச்சுவிட்டு,  "சஞ்சு... நீ சொன்ன வார்த்தை எனக்கு உன்மேல நம்பிக்கைய தந்துச்சு... குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுக்கற உன் குணம் எனக்கு நம்பிக்கை தந்துச்சு... எல்லாரோட சம்மதத்தோடவும் கல்யாணம் நடக்கும்னு நினைக்கிற உன் எண்ணம் உன் மேல நம்பிக்கை தந்துச்சு... நீ என்னயோ விஷ்ருத்தையோ ஏமாத்தல... நான் தான் தப்பான முடிவால என்னையே நானே ஏமாத்திருக்கேன்", என்றவர் அவளது கைகளை பற்றிக் கொள்ள, அவரது பதிலை கேட்டவள் மன திருப்தியோடு புன்னகைத்தாள்.

     இதையெல்லாம் வாசலில் நின்றிருந்த விஷ்ருத் மற்றும் வாசுதேவன் இருவருமே கேட்டிருந்தனர். பின் ஒருவரையொருவர் பார்த்து நிம்மதியான புன்னகையை சிந்தினர்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Wo Geschichten leben. Entdecke jetzt