அத்தியாயம் - 09

474 19 0
                                    

           வீட்டிற்கு மூவரும் வந்ததும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு, சஞ்சனா மீனாட்சியுடன் இரவு உணவு செய்வதற்கு உதவியாக சென்றுவிட்டாள். வினய் சக்தி இருவரும் டிவியை பார்க்க சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

      "டேய்! இப்ப ஜில்லா படத்த போடப்போறியா இல்லையா?" வினய்.

       "டேய்! வீரம் படம் முடிஞ்சவாட்டி ரிமோட்டை உன் கையிலியே கொடுக்கறேன் போதுமா?" சக்தி.

        "டேய் இப்பதான்டா ஜில்லா போட்டிருக்காங்க! அப்புறம் நெக்ஸ்ட் வேற ஷோ வந்திடும். திரும்பவும் எப்ப போடுவாங்களோ?", என்று ஏதோ கப்பல் மூழ்கியது போல் சோகமானான் வினய்.

        "அதே தான்டா நானும் சொல்றேன். இப்பதான் வீரம் படத்தையும் பாக்க முடியும் அப்புறம் எப்ப போடுவாங்களோ?" சக்தி.

     "அப்ப ரிமோட்டை எனக்கு தரமாட்ட?"

     "ம்ஹும்... முடியாது முடியாது முடியாது"

       "டேய்...", என்று கத்திக் கொண்டே ரிமோட்டை சக்தி கையிலிருந்து வினய் பிடுங்கி ஜில்லா படத்தை போட்டுவிட்டு சிரித்தான்.

       "டேய்...", என்று வினயிடம் இருந்து சக்தி பிடுங்கி மீண்டும் வீரம் படத்தை போட்டுவிட்டு சிரித்தான்.

      அவன் கையிலிருந்த ரிமோட்டை வினய் பிடுங்கிவிட்டு மீண்டும் மாற்றினான். பின் சக்தி... பின் வினய்... இப்படியே செய்துக் கொண்டிருக்க, இவர்களின் செயலில் கடுப்பான சஞ்சனா கிட்சனிலிருந்து வெளியே வந்தாள்.

     இருவரிடமும் ரிமோட்டை தராமல் அவள் எடுத்துக் கொண்டு பாட்டு சேனல் ஒன்றை வைத்துவிட்டாள். இப்போது இருவரையும் பார்த்து அவள் சிரிக்க,

     "ஏய்.....", என்று இருவரும் அவளை பார்த்து கத்த, அங்கு மூவருக்கும் ஒரு டபிள்யூ டபிள்யூ எஃப் மேட்சே நடந்தது.

    சரியாக டிவியில் 'குத்து படத்திலிருந்து போட்டுத்தாக்கு' பாடல் ஓடவும். இங்கு மூவரும் மாறி மாறி அடித்துக் கொள்ளவும் சரியாக இருந்தது.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now