அத்தியாயம் - 17

371 17 0
                                    

          விஷ்ருத் வாசுதேவனிடம் நடந்தவற்றை கூறிய பின்னர்...இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கிவிட...அதே நேரம் வீட்டின் மொட்டைமாடியில் சஞ்சனாவும் வினயும் மாலையில் நடந்தவற்றை தான் மீண்டும் நினைத்து பேசிக்கொண்டிருந்தனர்.....

   மூவருக்குமே விஷ்ருத்தை பார்த்ததும் முகம் மலர, வினயிற்கு பழைய நினைவுகள் யாவும் கண்முன் தோன்றி மறைந்தது.

    விஷ்ருத் எடுத்து வந்த காபியை ஆளுக்கொன்று எடுத்துக் கொண்டனர். 'அப்போ அந்த நீலநிற கார் விஷ்ருத்துடையது தான். இவன் தான் அந்த விருந்தாளி' என்று மூவருக்கும் புரிய அதிக நேரம் எடுக்கவில்லை.

   மூவருக்கும் எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்த விஷ்ருத், "அப்புறம் வொர்க் எல்லாம் எப்டி போகுது?", என்று மூவரிடமும் போதுவாக கேட்க...

    "நல்ல போய்ட்டிருக்கு மாமா... இப்போ ஒரு ப்ராஜெக்ட் வேலை நடக்குது", என்று பதில் தந்தான் சக்தி.

    வினயும், சஞ்சனாவும் காபி கோப்பையை பார்த்தபடியே அமர்ந்திருந்தனர்.

     "என்ன ப்ரோ! ரொம்ப சைலன்ட்டா இருக்க?", என்று விஷ்ருத் வினயிடம் கேட்க...
 
    "அப்டிலாம் இல்லடா! வேலைய பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் வேற எதுவும் இல்ல. உனக்கு வேலையெல்லாம் எப்டி போகுது? அங்க எல்லாரும் எப்டி இருக்காங்க?", என்று வினய் கேட்க விஷ்ருத்தும் அவனுடன் பேசத் தொடங்கினான்.

    'கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது? அடுத்து கண்டிப்பா இவன் என்கிட்ட தான் பேசுவான். அதுக்குள்ள நம்மலே எஸ்கேப் ஆகிடலாம்', என்று நினைத்த சஞ்சனா, விஷ்ருத்திடம் பேசாமலிருக்க "இப்போ வந்தடுறேன்", என்று பொதுவாக  கூறிவிட்டு தனதறைக்கு சென்றவளின் கால்கள் தானாக நின்றுவிட்டது.

    "சனா" என்ற விஷ்ருத்தின் அழைப்பை கேட்ட பின்பு.

   'சனா சனா', இவனின் இந்த  அழைப்பிற்காக எத்தனை நாள் காத்திருந்திருக்கிறாள், ஏங்கியிருக்கிறாள். அவன் தான் முதலில் இவளின் சஞ்சனா என்ற பெயரை சனா என்றழைத்தவனும் கூட. அவன் என்னமோ சாதரணமாக தான் சனா என்று அழைப்பான், ஆனால் இவளுக்கோ அவன் சொல்லும் போதெல்லாம், மின்சாரம் வந்து பாய்ந்தது போல் உணர்வாள். துள்ளலோடு அவன் முன் நிற்பாள். ஏனோ அவன் குரலால் சனா என்றழைக்கும்போது அந்த பெயர் தான் எத்தனை அழகு! இதற்காகவே தானே வழிய வந்து விஷ்ருத்திடம் பேசியிருக்கிறாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now