அத்தியாயம் - 32

538 17 2
                                    

வாசுதேவன், ரகுராம் இருவரும் பால்ய சிநேகிதர்கள் என்று சொல்லிவிட முடியாது... வாசுதேவன் முதலில் வேலை செய்த இடத்தில் அறிமுகமாகியவர் ரகுராம். இருவரும் சாதரணமாக பேசுவர் அவ்வளவே. அதன் பின் வாசுதேவன் சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் இருந்ததால் ரகுராமோடு பேச முடியாமலே போனது. அப்போது பணகஷ்டம் ஏற்பட, தானே முன் வந்து உதவினார் ரகுராம். முதலில் வாசுதேவன் மறுத்தார். அதன் பின் பார்ட்னர்ஷிப் முறையில் ரகுராம் கூற, ஒப்புக்கொண்டார். இருவரின் முயற்சியில் ஆர். வி கம்பனி தோன்றி, பிரபலமானது. ஏனோ ரகுராமைவிட வாசுதேவன் பெயர் புகழ்பெற்றது... அதை முதலில் ரகுராமும் பெரிதாக கண்டக்கொள்ளவில்லை... அதுவே பின்னாளில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.

      அன்று தொழில் சம்மந்தப்பட்ட சிலருடன் பார்ட்டி ஏற்பாடு செய்தனர் வாசுதேவன் மற்றும் ரகுராம். அப்போதுதான் ராதிகாவை தான் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வாசுதேவனிற்கு அறிமுகப்படுத்தினார் ரகுராம். இதை கேட்டு மகிழ்ச்சியடைந்தார் வாசுதேவன்.

    அதே நேரம் விருந்தினராக வந்திருந்த ஒருவர் ரகுராமை தனியாக பேச அழைத்து, தீய எண்ணத்தோடு வாசுதேவனை பற்றி தவறாக ஏதேதோ கூற, "என் நண்பனை பத்தி எனக்கு தெரியும்... நீ யாரு அவன தப்பா சொல்றதுக்கு" என்று ஆத்திரப்பட்டார் ரகுராம்.

    ரகுராமை நன்றாக குழப்பிவிட்டு வாசுதேவன் மேல் சந்தேகம் எழும் நிலையை ஏற்படுத்தி சென்றார்... இவர்களின் வளர்ச்சியால் பொறாமை அடைந்த அந்த நபர். முதன் முதலாக ரகு வாசுவின் நட்பில் சந்தேகமெனும் விரிசல் ஏற்பட்டது. அதன் பின் வந்த நாட்களில் வாசுதேவன் வேலையில் மும்முரமாக இருந்ததால், ரகுராமின் மாற்றத்தை கவனிக்க தவறிவிட்டார்.

   மாதங்கள் உருண்டோட ராதிகாவை ரகுராம் திருமணம் முடித்திருக்க, வாசுதேவன் மற்றும் ரகுராம் நட்பில் நிரந்திரமான பிரிவை ஏற்படுத்த காத்திருந்தது காலம்.

     "ரகு... நம்ம கம்பனியோட அக்கவுண்ட்ல இருந்து தேவையில்லாம நிறைய பணம் செலவாகுது போல", என்று எதர்த்தமாக வாசுதேவன் கேட்டார்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now