அத்தியாயம் - 10

482 18 0
                                    

           ந்த இரவு நேரம் தன் வீட்டில் தூக்கத்தை தொலைத்துவிட்டு நினைவுகளில் மூழ்கியிருந்தான் அதிரதன். ஒரு கையில் அந்த ஹார்டின் வடிவிலான பெட்டியும், மறுகையில் 'ஜானு' என்று பெயர் பதிந்த டாலர் செயினையும் வைத்திருந்தான். கண்கள் அந்த செயினைவிட்டு அகலவில்லை.

      அவனை தென்றல் காற்றும் குளிர்ச்சி படுத்தவில்லை... வானத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த நிலாவையும் மனதுக்கு ரசிக்க தோன்றவில்லை... மாறாக அவனால் ஜானு என்று அழைக்கப்படும் ஜான்சியின் நினைவு மட்டுமே இருந்தது. 

      ஜான்சிராணி அந்த பெயருக்கு மட்டுமல்ல, அவனுக்கும் உரியவள். பலரையும் ஆளுமை செய்து தன் கட்டுப்பாட்டில் வைத்து ராஜியம் செய்யும் அதிரதனையே ஆளும் திறன் கொண்டவள் அவள் ஒருத்தி தான்.

    அவன் நினைவுகள் அவளை பார்த்த அந்த முதல் நாளைதான் நினைத்துக் கொண்டிருந்தது........

_ _ _ _ _ _     

   திகாச காலத்திலிருந்து குறிப்பாக மகாபாரத காலத்திலிருந்து, இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும் தலைநகரமாக இருக்கும் டெல்லி நீண்ட வரலாறு கொண்டது.

       காதலர்களின் சின்னமாக இன்றளவும் நிலைத்து, கட்டிட கலையில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் குறிப்பிடத்தக்கது. குதுப்மினார், செங்கோட்டை, ஜூம்மா மசூதி என எண்ணிலடங்கா புகழ்பெற்ற இடங்களையும் கொண்டது டெல்லி.

   ந்த மாநிலத்தில் உள்ள பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான ***** காலேஜில் படித்துக் கொண்டிருந்தான் அதிரதன். அவனின் அதிக மதிப்பெண்களாலும், திறமையாலும் கல்லூரியில் நற்பெயரும் தனக்கென தனியொரு அடையாளத்தையும் பெற்றிருந்தான்.

      "அம்மா! இங்க இருந்த என் ஷூ எங்க?"

    "அம்மா! என்னோட புக்ஸ் எல்லாத்தையும் இடத்த மாத்தி வைக்காதீங்கன்னு எத்தன தடவை சொல்றது?"

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now