அத்தியாயம் - 53

247 7 0
                                    

இன்றோடு சஞ்சனா, ரஞ்சிதா மற்றும் விகாஸ் மூவரின் ஆஸ்திரேலியா வாழ்க்கை இனிதே முடிந்தது.

    "சீக்கிரமா மூணு மாசம் போகிடுச்சுல",  என்ற ரஞ்சிதாவிடம், "இங்க அவனவன் உசுர கொடுத்த வேலை செஞ்சி... கிட்ட தட்ட பிழிஞ்சி எடுத்துட்டாங்க... மகாராணிக்கு பேச்ச பாரு... மூணு மாசம் சீக்கிரமே போகிடுச்சாம்" என்றான் விகாஸ்.

     "விகாஸ் இஷ்டபட்டு செஞ்சா... கஷ்டம் கூட இஷ்டமாகிடும்" என்ற சஞ்சனாவை இருவரும் முறைக்க, அவள் இளித்தாள். இவ்வாறு அரட்டைகளோடும், பேச்சுடனும் சென்னைக்கு வந்திறங்கினர்.

     விகாஸ் தனக்கென காத்திருந்த அவன் மனைவியுடன் சென்றுவிட, ரஞ்சிதாவும் புறப்பட்டிருந்தாள்.

    சஞ்சனாவை அழைத்துக் கொண்டு செல்ல, அவளது தந்தை கிருஷ்ணமூர்த்தி வந்திருக்க, அவரை அணைத்து விடுத்தாள்.

     "எப்டி இருக்கீங்கப்பா... அம்மா எப்டி இருக்காங்க... எல்லாரும் எப்டி இருக்காங்க?", என்றவள், "என்னப்பா இளச்சு போய்ட்டீங்க", என்று அவரை ஆராய்ந்து பார்த்தாள்.

    அவர் புன்னகையுடன், "அட நீ வேறம்மா... உங்கம்மாவுக்கு நான் ரெண்டு சுத்து ஏறுனாப்புல தெரியுறேன்னு சொல்ற... நீ என்னடான்னா", என்று சிரித்தார்.

   இருவரும் பேசியபடியே வெளியே வந்து, புறப்பட்டனர்.

    சஞ்சனா ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க, அதை கவனித்தவர், "சஞ்சுமா... பாட்டி தாத்தாவ பாக்கனுமாடா", என்றவரை அவள் கேள்வியாக பார்க்க, "இல்லடா உன்னை ஊருக்கு கூட்டிட்டு போக தான் நான் வந்தேன்... நேரா நம்ம ஊருக்கு தான் போறோம்... அதான் கேட்டேன்", என்றார்.

   "பாட்டி தாத்தாவ பாத்துட்டே போலாம் ப்பா... அவங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சுல", என்றவளிடம், "சரிமா", என்று வாசுதேவன் வீட்டிற்கு வந்தனர்.

வாசுதேவன் வீட்டில்...

   விஷ்ருத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு, காரிலிருந்து இறங்கியவள் உற்சாக துள்ளலுடன், "பாட்டி நான் வந்துட்டேன்", என்று கத்திக்கொண்டே வேகமாக உள்ளே வந்து, மீனாட்சியை தாவி அணைத்துக் கொண்டாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now