அத்தியாயம் - 50

279 11 0
                                    

வாசுதேவன் வீட்டில்...

     காலையில் வாசுதேவனும் தேவகியும் சுந்தரம் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். விஷ்ருத்திடம் சில அலுவலகம் பற்றிய விஷயங்களை பேசிக் கொண்டிருக்க, அவனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

     அதே நேரம் வாசலில் கேட்ட கார் சத்தத்தில் தேவகி வெளியே வந்து பார்க்க, மீனாட்சி, சுந்தரம் மற்றும் சக்தி வந்திறங்கினர்.

    வாசுதேவன் வீட்டில், நின்றிருந்த தேவகியை கண்டு மூவரும் அதிர்ந்தனர். யாருக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று பயமும் வந்தது.

    "வாங்க மாமா... வாங்க அத்தை", என்றபடி அவர்கள் அருகில் வர, மூவருமே குழப்பமாக அவரை பார்க்க, அதே நேரம் அங்கு வந்த வாசுதேவன் "அம்மா எவ்ளோ நேரம் வெளிய நிப்பீங்க உள்ள வாங்க", என்றிட, அனைவருமே உள்ளே வந்தனர்.

    காலில் கட்டுப் போட்டு அமர்ந்திருந்த விஷ்ருத்தை கண்டு மீனாட்சியும் சுந்தரமும் பதட்டப்பட, அவர்களை சமாதானப்படுத்தவதற்குள் ஒரு வழியாகிவிட்டான் விஷ்ருத்.

     இவர்கள் இப்படி இருக்க, சக்தி யோசனையாக "அத்தை நீங்க இங்க இருக்கீங்க", என்று தன் மனதில் உள்ளதை கேட்டுவிட்டான். அப்போது தான் தேவகி ஞாபகம் வர, சுந்தரம் மற்றும் மீனாட்சியும் அவரை பார்த்தனர்.

     "பாட்டி... அம்மா அவங்க புகுந்த வீட்டில இருக்கிறதுல தப்பா", என்று புருவம் உயர்த்தி கண்ணடித்து சிரித்தான் விஷ்ருத்.

   வாசுதேவனும் தேவகியும் புன்னகைத்தனர். நடந்தவற்றை சுருக்கமாக விஷ்ருத் கூறிவிட்டு, மற்றவர்களை பார்த்தான். மீனாட்சி தேவகியை அணைத்துக் கொண்டு அழுதிருக்க, சுந்தரம் வாசுதேவனை தோள் தட்டி அணைத்துக் கொள்ள, சக்தி விஷ்ருத் அருகில் அமர்ந்தான்.

     அனைவருமே அழுதுவிட்டனர். தேவகி மீண்டும் தங்களோட வர மாட்டாரா என்று மீனாட்சியும் சுந்தரமும் நினைக்காத நாளே இல்லையே. எத்தனை பண்டிகை... எத்தனை விஷேசம்... தேவகியின்றி ஒரு வெறுயையோடு ஏக்கத்தோடு என எத்தனை வருடங்கள் கடந்துவிட்டது.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now