அத்தியாயம் - 18

501 19 0
                                    

           லுவலகத்திற்கு வந்திறங்கியதும் வினய் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டிவிட்டு சக்தியை தேட, அவன் தோளை ஒருவிரல் கொண்டு சஞ்சனா சுரண்டினாள்.

   அவன் கடுப்புடன் "ப்ச்! என்னடி?" என்றான்.

    "சக்தி மீட்டிங் ஹால்ல இருக்கானாம்!நம்மல சீக்கிரம் வர சொன்னான். வா போலாம்", என்று சஞ்சனா முறைப்புடன் கூறிவிட்டு முன்னே நடக்க, இவனும் பின் தொடர்ந்தான்.

      மீட்டிங் ஹாலை நெருங்க நெருங்க அதிரதன் பேசுவது நன்றாகவே கேட்டது. இருவரும் வேகமாக வந்து, "மே ஐ கம்மின் சார்!", என்று அனுமதி கேட்க, சிறு முறைப்புடன் உள்ளே வரும்படி தலையசைத்தான் அதிரதன். மீட்டிங் தொடங்கிய ஒருசில நிமிடங்களில் வினயும் சஞ்சனாவும் வந்ததால் அதிரதன் முறைப்போடு நிறுத்திக் கொண்டான், இல்லையென்றால் இருவருக்கும் நிச்சயம் அவன் அர்ச்சனை செய்திருப்பான்.

      "இந்த ப்ராஜெக்ட் நம்ம நல்லபடியா முடிச்சிட்டோம்! அதுக்கு எல்லாருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்!", என்க எல்லாரும் தங்களின் நன்றியை தெரிவிக்க, அவன் புன்னகைத்தான்.

   "பட், ப்ரசென்ட்டேஷன் பண்ண போற இடம் வேற!", என்று அதிரதன் கூறியதும் எல்லோரிடமும் சலசலப்பு ஏற்பட்டது.

    "சைலன்ட் ப்ளீஸ்!", என்று அதிரதன் கூற, அமைதியாகினர். பேச்சை தொடர்ந்தான்.

   "ப்ரசென்ட்டேஷன் டெல்லியில பண்ணபோறோம். கம்மிங் டியூஸ்டே. நம்ம கம்பனி சார்பா பிரசன்ட்டேஷன் பண்றதுக்கு, எம்டி அன்ட் ப்ராஜெக்ட் மேனேஜரா என்னையும், சஞ்சனா 
அன்ட் அவங்க டீமில இருக்கும் சிவா. எங்க மூணுபேரையும், நம்ம கம்பனி ஹெட்ஸ் செலக்ட் பண்ணிருக்காங்க. ஒன்ஸ் அகைன் தாங்க்யூ காய்ஸ்! மீட்டிங் ஓவர், ஆல் மே கோ! அன்ட் சஞ்சனா, சிவா நீங்க பர்தர் டீடெய்ல்சுக்கு என் கேபின் வாங்க!" என்று அதிரதன் கூறினான். அனைவரும் அவரவர் கேபினுக்கு சென்றுவிட்டனர்.

      வெளியில் வந்த சஞ்சனாவை சிவா, சக்தி, வினய் மூவரும் பிடித்துக் கொண்டனர்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now