அத்தியாயம் - 06

543 20 0
                                    

         டாரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதிரதன் நிமிர்ந்து பார்க்க, வினயும் சக்தியும் மூச்சி வாங்கயபடியே அவன் முன் பதட்டமாக நின்றனர்.

     "கதவ தட்டிவிட்டு வரணும்னு தெரியாதா? இடியட்ஸ்!", என்று அதிரதன் கத்த,

     அதை காதில் வாங்காதவர்கள் போல், "சார் சஞ்சனாவ காணோம் சார்", என்று இருவரும் கோரஸாக கூறினார்.

     இவர்களின் குரலை மேஜையின் அடியில் தாள்களை எடுத்துக் கொண்டிருந்த சஞ்சனா கேட்க "டேய் நான் இங்க தான்டா இருக்கேன்", என்று சொல்ல வெளிய வந்தவள் பட்டென்று நிமிர, கவனமின்மையால் மேஜையிலே தலையை நங்கென்று இடித்துக் கொண்டாள். வெளியே வரலாம் என்றால் இடித்ததில் தலை சுற்றுவது போல் இருக்க அப்படியே அமர்ந்துவிட்டாள்.

    அவர்களிடம் "வாட்?" என்ற அதிரதனின் குரலில் அவளே குழம்பிவிட்டாள்.

      'என்ன இவருக்கு அம்னீஷியாவும் இருக்குமோ? இப்பதான என்கிட்ட பேசினாரு, இவராவது நான் இங்க இருக்கேன்னு சொல்ல வேண்டியதுதானே',என்று தலையை தேய்த்தபடியே மனதுக்குள் அவனை திட்டினாள்.

சக்தி, "ஆமா சார்! அவள காணோம் நீங்க தான், எதாவது பண்ணணும்!"

    "என்னடா மிஸ்ஸிங் கேஸ் மாதிரியே சொல்ற? கண்டுபிடிச்சு தர இவரு என்ன போலீஸா?", என்று சக்தியின் காதில் வினய் கிசுகிசுக்க,

    "இப்ப கொலை நடக்க போவுது பாக்குறியா?", என்று சக்தியும் அவனை போலவே கூற,

   "யாரடா சொல்ற?", என்று வினய் புரியாமல் கேட்க, "உன்னை தான்டா!" என்று சக்தி கூறியதில் அடங்கியவன். அவன் பேசுவதை வேடிக்கை பார்த்தான்.

    அதிரதனின் பக்கம் திரும்பிய சக்தி, "என்ன சார், அமைதியா நிக்கிறீங்க? இந்த கம்பனில நீங்க இருக்கும் போதே, திறமையான, புத்திசாலியான, ரத்தம் சிந்தி உழைக்கும் டீம் லீடராக இருக்கும் ஒரு பெண்ணை காணோம்னு சொல்றோம், ஏதோ பீச்சுக்கு வந்து கடல பாக்குற மாதிரி கூலா எங்கள வேடிக்கை பாத்துட்டு இருக்கிங்க. இப்ப இங்க சஞ்சனா வரலைனா உங்க மேல கூட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டான் இந்த சக்தி", என்று வீரவசனம் போல் கூறியதில்,

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now