அத்தியாயம் - 41

268 12 0
                                    

     "ஜானு இத பாரேன்... ரெட் கலர்ல இந்த சாரி நல்லாயிருக்கு... இதையே எடுத்துக்கோயேன்... உனக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்கு", என்று அதிரதன் ஜான்சி மீது புடவையை வைத்துக் கொண்டு கூறினான். கிட்டதட்ட அரைமணி நேரம் மேலாக ஆயிற்று இன்னும் அவள் ஒரு புடவையை எடுத்தபாடில்லை.

    தேவகி, ராதிகா, லலிதா மூவரும் காட்டிய எந்த சேலையையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்துவிட்டாள். இந்த அலப்பறைகளை பார்த்துக் கொண்டிருந்த அதிரதன் பொறுமையிழந்து அவனே ஒரு புடவையை எடுத்துக்காட்டினான்.

    இப்போது என்ன காரணம் சொல்லப்போகிறாளோ என்று அவள் முகத்தை அனைவரும் ஆர்வமாய் பார்க்க அவள் கூறியதில் அனைவரும் வாயை பிளக்க, அதிரதன் முகத்தில் வெட்க சிரிப்பு. ஆம் அவன் காட்டிய புடவையை பார்த்த நொடியே "பிடித்திருக்கு", என்றுவிட்டாள்.

    "ம்ம்... பாத்தீங்களா இவ்ளோ நேரம் நம்ம இவகிட்ட காட்டுன புடவையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டு... மாப்ள காட்டுனதும் சரிங்கறா", என்று தேவகி மற்றும் ராதிகாவிடம் பொய்யாக குறைபட்டுக் கொண்டார் லலிதா.

    "அவர கட்டிக்க போறேன்ல அதான் அவர கொடுத்த சாரியையும் கட்டப்போறேன்", என்று அதிரதன் முகம் பார்க்க, அவனோ அவளை முறைக்க முயன்று சிரித்துவிட்டான்.

    "சரிசரி அதான் ஜான்சிக்கு புடவை எடுத்தாச்சுல... நீங்க மூணு பேரும் உங்களுக்கு புடவை எடுங்க", என்று லோகநாதன் கூற, "அட நீங்க என்ன இப்டி அவசர படுத்துறீங்க... நாங்க பொறுமையா நிதானமா தான் எடுப்போம்", என்று லலிதா கூறிவிட்டு தேவகி மற்றும் ராதிகாவை அழைத்துக் கொண்டு போனார். லோகநாதன் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள, ஜான்சியும் அதிரதனும் சிரித்தனர்.

    அதிரதனும் அவர்களோடு சென்று ராதிகாவிற்கு புடவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த ராதிகாவின் அலைப்பேசி ஒலிக்க, வாசுதேவன் என்றதும் உடனே எடுத்தான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now