அத்தியாயம் - 19

381 18 0
                                    

        நாட்கள் அதன் போக்கில் செல்ல... சஞ்சனா டெல்லிக்கு செல்லும் நாளும் வந்தது.

     சஞ்சனா பேக் செய்தவற்றை சரிபார்த்துக் கொண்டிருக்க, வினயும் சக்தியும் அவளுக்கு உதவிசெய்துக் கொண்டிருந்தனர். அவர்களால் சஞ்சனாவை போக வேண்டாம் என்று தடுக்க முடியவில்லை அதனால் அவள் இஷ்டம் என்று விட்டுவிட்டனர்.

     சஞ்சனாவின் அலைப்பேசி ஒலித்தது. அவளின் தாய் சத்யா தான் அழைத்திருந்தார்.

    அவள் "ஹலோ" என்பதற்குள்,  "சஞ்சனா எல்லாத்தையும் பேக் பண்ணிட்டதானே? எதுக்கும் ஒரு ஸ்வெட்டர் எடுத்துக்கோ! அப்பறம் நீட்டா டிரஸ் அயன் பண்ணி எடுத்துக்கோ!இங்க பாரு சஞ்சும்மா, தேவையில்லாம யாருகிட்டயும் பேசக்கூடாது. மீட்டிங்ல கரக்டா எல்லாத்தையும் பேசனும். எந்த பிரச்சனையா இருந்தாலும் உடனே சொல்லிடு. அங்க போய் எதையாவது சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காதே அப்புறம்..", என்று ஏதோ சத்யா கூறவர,
 
       "அப்புறம்... காலையில சீக்கிரம் எழுந்து ரெடியாகிடனும். அதிகமா வாய் பேசக்கூடாது. எங்க போனாலும் ஜாக்கிரதையா இருக்கனும். டெல்லி ரீச் ஆனதும் அம்மாக்கு போன் பண்ணணும். இதே போல தினமும் காலையிலயும் நைட்லயும் போன் போட்டு என்ன நடந்துச்சுன்னு நியாபகமா சொல்லனும். போன நோண்டிக்கிட்டே இருக்காம சீக்கிரமே தூங்கிடனும். இதுதானே தாயே!இதையெல்லாம் நீங்க சொல்லி சொல்லி... எனக்கே மெமரி ஆகிடுச்சு!", என்று ஒரே மூச்சாக கூறிமுடித்தாள் சஞ்சனா.

      இதை கேட்ட சத்யா சிரித்துக் கொண்டே, "மீட்டிங்ல போய் இதையே சொல்லிடாதடி" என்க,

    "அம்மா...", என்று சிணுங்கினாள்.

    "சரி இரு... உங்கப்பா பேசனுமாம்", என்று சஞ்சனாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் அலைப்பேசியை கொடுத்தார்.
      
    "சஞ்சுமா! பேக்கிங்லாம் முடிஞ்சதாடா?", என்றவரிடம்,
 
    "ம்ம்...பேக்கிங்லாம் முடிஞ்சதுப்பா", என்றாள்.

    "அப்பாவுக்கு ஒரு ஆர்டர் வந்துருச்சுடா. அம்மாவுக்கும் ஸ்கூல்ல இன்ஸ்பெஷன் வராங்களாம், அதனாலதான் எங்களால வரமுடியல. கோவிச்சிக்காதம்மா", என்று சிறு வருத்தத்துடன் கிருஷ்ணமூர்த்தி
கூற, அதை கேட்டவள்,

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now