அத்தியாயம் - 45

434 15 0
                                    

இரவு தாமதமாக உறங்கியதன் பலன்... காலையிலும் தாமதமாக தான் எழுந்தான் விஷ்ருத்.

       மனமே இல்லாமல் தயாராகிவிட்டு அலுவலகம் வந்தான். யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அமர்ந்திருந்தவனை, வாசுதேவன் கேள்வியாக பார்த்தபடி "டேய் விச்சு", என்றழைத்தார்.

    விட்டத்தை வெறித்தபடியே "சொல்லுங்க டாட்", என்றவனை பார்த்து முறைத்து "நான் என்ன மேலையா உக்காந்திருக்கான்... திரும்புடா" என்றிட, அவரை பார்த்தான்.

    "எனக்கு உன்கிட்ட ஒன்னு கேக்கனும்... ஆனா ஏதோ தடுக்குது", என்றார் யோசனையாக. தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் அவர் அருகில் வந்தமர்ந்து அவர் கைகளை தன் கைகளுக்குள் வைத்தபடி "என்கிட்ட என்ன தயக்கம்", என்று புன்னகைத்தான்.

     அவர் ஒரு சில நொடிகள் யோசனைக்குப் பின் "வினய்க்கு கல்யாணம் பண்ணப்போறோம்... நம்ம எல்லாருக்கும் சந்தோஷம் தான்...", என்றிட "ஆமா ப்பா... நான் ரொம்ப எக்சைட்டடா இருக்கேன்", என்று இடையிட்டான்.

     "அந்த எக்சைட்மென்ட்... எங்களுக்கு நீ எப்போடா தருவ", என்றார் அர்த்தத்துடன். அவர் கூற வருவது புரிந்து கொண்டு "தந்துட்டா போச்சு", என்று சிரித்தான்.

   அவர் வியந்துப் போய் பார்க்க, "ஏன் இப்டி பாக்குறீங்க", என்றான்.

    "கல்யாணம் பண்ணிக்கிறேன் மட்டும் சொல்றியா... இல்ல எங்களுக்கு பொண்ணு பாக்குற வேலையையும் மிச்சம் பண்ணிட்டியா", என்றார். அவன் பதிலுக்கு ஒரு புன்னகையை சிந்தினான்.

     "டேய் மகனே... உன் மூஞ்ச காட்டு... இதே மூஞ்சி தானே... ஐ ஹேட் லவ் அன்ட் மேரேஜ்னு சொன்னுச்சு", என்று அவன் கன்னத்தில் வலிக்காமல் தட்டினார். அவன் பொய் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொள்ள, வாசுதேவன் சிரிப்புடன் "மருமகள எப்போடா காட்டுவ... பேர் என்ன", என்றார்.

      "கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சவாங்க தான்... அது அப்றமா சொல்றேன்... என் காதல்... மோதல்ல நிக்குதுப்பா", என்று முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now