அத்தியாயம் - 26

306 16 0
                                    

          அதிரதன் அதிர்ச்சியோடு ராதிகாவை பார்க்க... அவரோ 'அவன் என்ன சொல்ல போகிறான்' என்ற ஆவலுடன் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

      "ம்மா... கா..காத... காதலிக்கிறேன் ஆனா... அது சஞ்சனா இல்ல... என்னோட காலேஜ்ல படிச்ச பொண்ணு... நான் கூட ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணேன் நியாபகமிருக்கா", என்று சற்று தயக்கத்துடன் பேசி நிறுத்த, "ஹான்... ஜான்சிராணி... அவளா", என்ற ராதிகாவிடம் "ம்ம் ஆமாம்மா", என்றான்.

    ராதிகா மௌனமாக அதிரதனை பார்க்க, அவன் கீழே குனிந்துக் கொண்டான்.

     "மகனே... அக்மார்க் முத்திரை குத்துன தங்கமா வளத்துட்டேன்ல உன்ன", என்று அதிரதன் கூறியதை போல் கூற, "ம்மா..." என்றவனிற்கு லேசான பயம்.

     "எப்டி அதி... உன்னால இப்டி செய்ய முடிஞ்சது... நான் இப்ப கேக்கலைன்னா இப்பகூட சொல்லிருக்க மாட்டதானே... என் பையன் இப்டிலாம் பண்ணுவான்னு நான் கனவில கூட நினைச்சு பாக்கல... ஆனா எல்லாம் நடந்துடுச்சு", என்றவர் ஒரு பெருமூச்சுவிட்டு "உனக்கு என்ன தோணுதோ அதையே செய்... உன் இஷ்டம்", என்றவர் கோபமாக சொல்லிவிட்டு செல்ல அதிரதன் முகம் சோகமாகிவிட்டது... அவன் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.

       "டேய்... அதி கண்ணா..." என்று ராதிகா அழைக்க சட்டென நிமிர்ந்து பார்க்க அவர் சிரிப்புடன் "சும்மா... ப்ராங்க் பண்ணேன்டா" என்றார். அருகில் செல்வியம்மாவும் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

    அவரை ஓடிப்போய் அணைத்துக் கொண்டவன் அழுதுவிடும் தோனியில் "இப்டிலாம் பண்ணாதீங்கம்மா... எனக்கு கவலையாகிடுச்சு", என்க "அச்சோ... என் தங்கம் சோகமாகிடுச்சா... சரிடி ராஜாத்தி அழுதீங்க... அம்மா சும்மா சொன்னேன்டா... என் கண்ணு எப்டி ரியாக்ஷன் கொடுக்கறன்னு பாக்க தான்... சரி என்ன பண்ணா சமாதானம் ஆகுவீங்க", என்று ராதிகா அவனை விலக்கி அவன் முகம் பார்க்க அவனோ முறைத்துக் கொண்டிருந்தான்.

    "சரி சரி... எப்படா... என் மருமகளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவ", என்று ராதிகா அதட்டலாக கேட்க அவர் சொன்னது புரியவே அதிரதனிற்கு சில நிமிடங்கள் எடுத்தது.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now