அத்தியாயம் - 38

476 16 0
                                    

சஞ்னா வீட்டில்....

அலுவலகம் முடித்து வீடு வந்து சேர்ந்தனர் சஞ்சனா மற்றும் சக்தி.

"என்னடா... நீங்க ரெண்டுபேரும் மட்டும் வந்திருக்கீங்க... எங்க வினய்?", என்று சுந்தரம் தனது கனீர் குரலில் கேட்க, 'தாத்தா வீட்ல தான் இருக்காரா?' என்று சஞ்சனாவும் சக்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, "டேய் இது நம்ம லிஸ்டில்யே இல்லயேடா... என்னத்த சொல்லி சமாளிக்கிறது!" என்று சக்திக்கு மட்டும் கேட்கும்படி சஞ்சனா கூற, 'நான் பாத்துக்கிறேன்' என்பது போல் கண்ணை மூடி திறந்து, சாதரணமாக முகத்தை வைத்தபடி, "அவன் ப்ரெண்ட பாக்க போயிருக்கான் தாத்தா", என்று அள்ளிவிட்டான் சக்தி. சஞ்சனாவும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.

அவர் நம்பாமல் பார்த்து "அவனுக்கு ஏதுடா ப்ரெண்ட்... அதுவும் உங்கள விட்டுட்டு பாக்க போற அளவுக்கு அப்டியாரு அந்த ப்ரெண்டு" என்று அந்த 'ப்ரெண்டில்' அழுத்தம் கொடுத்தார்.

'அவன் கேர்ள் பிரண்ட்', என்று இருவரும் மனதில் நினைத்தனர்.

"என்ன ரெண்டு பேரும் முழிக்கிறிங்க?" என்றவரை, அடுக்களைக்குள் இருந்த வெளியே வந்து "அட ஏங்க நீங்க... இப்டி களச்சு போய் வந்த பிள்ளைங்கள விசாரிச்சிட்டு இருக்கீங்க... பாவம் பிள்ளைங்க... நீங்க போங்க கண்ணுங்களா", என்று சுந்தரத்திடம் தொடங்கி... சஞ்சனா, சக்தியிடம் முடித்தார் மீனாட்சி. இருவரும் விட்டால் போதும் என்று ஓடிவிட்டனர்.

சிறிதுநேரத்தில் வீட்டுக்கு வந்தான் வினய். சுந்தரத்தை பார்த்ததும் சிரித்துவிட்டு போயிருக்கலாம் அல்லது எதுவுமே கூறாமலாவது போயிருக்கலாம், பக்கிபய... வலிய வந்து அவரிடம் "என்ன தாத்தா இந்நேரத்துல அதிசயமா வீட்ல இருக்கீங்க", என்று ஆயாசமாக அமர்ந்தான்.

"நான் வீட்ல இருக்கிறது இருக்கட்டும்... துரை எங்க போய்ட்டு வந்தீங்க", என்றதும் வினய் ஒரு நொடி திகைத்த பின் "அது வந்து தாத்தா... ஹாங்... ஆபீஸ்ல பெரிய வேலை வந்திடுச்சு... எம்டி வேற நான் தான் செய்யனும்னு சொல்லிட்டாரு... அதான் லேட் ஆகிடுச்சு தாத்தா... சக்தி சஞ்சு சொல்லிருப்பாங்களே", என்று காஃபியை அருந்திக் கொண்டிருந்த இருவரையும் பார்க்க அவன் சொன்ன காரணத்தை கேட்டதும், சக்தி குடித்த காஃபியை அப்படியே துப்பிவிட்டான். சஞ்சனா தலையில் அடித்துக் கொண்டாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Donde viven las historias. Descúbrelo ahora