அத்தியாயம் - 47

321 11 0
                                    

சுந்தரம் வீட்டில்...

          இது அவர்களின் பழைய வீடு. முதன்முதலில் சுந்தரம் மீனாட்சி வாழ்ந்த வீடு இது தான். தொழில் காரணமாக சென்னைக்கு வந்துவிட்டனர். இதற்கு ஒரு தெரு தள்ளி தான் வினயின் தந்தை நாராயணன் வீடு, பக்கத்து பக்கத்திலே சக்தியின் வீடு, சஞ்சனாவின் வீடும் உள்ளது.

      இவர்கள் அனைவரும் வந்ததை அறிந்து ஊரில் அக்கம் பக்கத்தில் உள்ள சொந்தங்கள் வந்து நலம் விசாரித்தனர்.
 
    அவர்களது அதிகமான கேள்வி மூத்த பையனும் மருமகளும் எங்கே என்பது தான். அதாவது வாசுதேவன், தேவகியை பற்றி தான் கேட்கிறார்கள். வாசுதேவன் சென்னைக்கு வந்தபிறகு அடிக்கடி இங்கு வருவதில்லை. அதனால் அவர்களது பிரிவை பற்றி இங்கு எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    அடுத்ததாக கேட்டது 'சஞ்சனா மற்றும் விஷ்ருத்தை பற்றியும்... அவர்களுக்கு எப்போது திருமணம் என்பது தான்', ஏதோ சொல்லி சமாளித்துவிட்டனர். சற்று நேரத்தில் சொந்தங்கள் புறப்பட்டனர். அனைவரிடமும் ஒரு நிம்மதி பெருமூச்சு.

     மாலை மங்கி இருள் திரையிட்டது. வினய் மற்றும் பானுமதியை, வினயின் வீட்டில் அவளை தயார் படுத்திவிட்டு, அனைவரும் இவர்களுக்கு தனிமை தந்துவிட்டு சுந்தரம் வீட்டிற்கு சென்று, காலையில் வேறு சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் அசதியில் உறங்கிவிட்டனர்.

வினயின் வீட்டில்...

        இங்க பானுமதி வினயின் அறையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அறையில் ஆங்காங்கே சக்தி, சஞ்சனா மற்றும் வினயின் சிறு வயது மற்றும் இப்போதையே புகைப்படங்கள் ப்ரேம் போட்டு மாட்டியிருந்தது.

     பீரோ ஒன்று இருந்தது. ஒரு புக் ஷெல்ஃப் இருந்தது. அலங்கரிக்கபட்ட அவனது கட்டில்.

   இப்போது சென்னையில் தான் வினய் இருப்பதால் அறையில் கொஞ்சம் வெறுமை தங்கி இருந்தது.

      மாடியில் நின்றிருந்த வினய் விஷ்ருத்திற்கு அழைப்பு விடுத்தான். அழுது வீங்கிய முகத்துடன் விஷ்ருத் உறங்கிக் கொண்டிருக்க, ஏதோ ஒரு சத்தம் அவன் இமைகளை திறக்கச் செய்தது. அது அலைப்பேசி ஒலி என்பது புரிய எழுந்தவன் ஏதோ ஒரு நியாபகத்தில் அடிபட்ட காலை ஊன்றிவிட, வலியில் துடித்து அப்படியே அமர்ந்துவிட்டான். ஒரு சில நிமிடங்கள் கடந்து மேஜையின் மீது இருந்த மொபைலை எக்கி எடுத்தவன் யார் அழைத்தது என்று பார்த்தால் அது வினய். யோசனையுடன் அவனுக்கு அழைப்பு விடுத்தான்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now