அத்தியாயம் - 52

258 11 0
                                    

சஞ்சனா கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு, அதை யோசனையாக பார்க்க, அதற்குள் அழைப்பு துண்டானது. மீண்டும் விஷ்ருத் அழைத்தான். மறுக்கத் தோன்றாமல் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

    அவள் கண்களை பனிக்க வைத்து, நெஞ்சம் அடைக்க வைத்தது... விஷ்ருத்தின் "சனா", என்ற அழைப்பு.

   அவனது குரலிலே தெரிந்தது அவனது வலியும் வேதனையும்... காதல் கொண்ட மனம், மூளை 'பேசாதே' என்ற கட்டளையிடுவதையும் பொருட்படுத்தாது, வார்த்தைகளை உதிர்த்தது, "விஷ்ருத்", என்று.

   அதற்கு மேல் இருவருக்குமே என்ன பேசுவதென்று தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான மௌனம் வார்த்தைகளில் அடங்கிடாத காதலை பேசியது.

     "சனா... எதாவது பேசு... என்னை திட்டு... உன்னை ரொம்ப அழ வச்சிட்டேன்ல", என்று வலியோடு ஒரு புன்னகையை சிந்தினான். அவளிடம் பதிலில்லை.

   "சரி எப்டி இருக்க... எப்போ ஊருக்கு வருவ", என்றான்.

   "ம்ம்... நல்லாயிருக்கேன்... இன்னும் ரெண்டு நாள்ல வந்திடுவேன்... நீ எப்டி இருக்க... கால் அடிபட்டது சரியாகிடுச்சா"

    "ம்ம்... பரவாயில்ல... காதல் தான் அவஸ்தையா இருக்கு... எப்போதுமே உன்னை தான் மனசு தேடுது... ஐ மிஸ் யூ எ லாட்", என்று வேதனையுடன் கூறினான்.

    "நான் வைச்சிடுறேன்... பை", என்று பட்டென அழைப்பை துண்டித்தவிட்டாள். அவனிடம் பேசப் பேச மனம் அவன் புறம் சாய்வதை தடுக்க முடியவில்லை.

     விகாஸ் மற்றும் ரஞ்சிதாவிடம் தலைவலி என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்தவள், தனது அறைக்கு வந்து மெத்தையில் சரிந்தாள்.

   
அதிரதன் அலுவலகம்...

      தனது கேபினுள் ரூபாவுடன் ஏதோ தீவிரமாக அதிரதன் பேசிக் கொண்டிருக்க, ரூபா சில கோப்புகளை அவன் முன் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now