அத்தியாயம் - 22

321 17 0
                                    

         லுவலகத்திலிருந்து வந்த அதிரதன் குளித்து முடித்து ஹாலில் தொலைக்காட்சி பெட்டியை ஒளிக்கவிட்டு அமர்ந்துவிட்டான்.

      சட்டென கேட்ட அழைப்பொலியை வைத்தே அறிந்துக் கொண்டான் ஜான்சிதான் அழைத்திருக்கிறாள் என்று.  கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இப்போது... தன் தந்தை லோகநாதனுடன் அவரது அலுவலகத்திற்கு சென்று சிறு சிறு வேலைகள்  கற்றுக்கொண்டிருக்கிறாள் ஜான்சி ராணி. அதிரதன் ஒரு பிரபலமான கம்பெனியில் வேலை செய்து வருகிறான். இதனால் இருவருமே மாலை வந்ததும் அலைப்பேசியில் பேசுவதை வழக்கமாக்கி கொண்டனர்.

     "ஹலோ அதி"

     "சொல்லு ஜான்சி", என்று திரும்ப ராதிகா வேலை முடித்து வந்திருந்தார். அப்படியே பேச்சை மாற்றினான்.

     "ஹான்... சொல்லு மச்சான்... ஓ... அம்மாவா நல்லாயிருக்காங்க... இப்பதான் ஆபிஸ் முடிச்சு வந்தாங்க", என்றபடி ராதிகாவை பார்த்து "என் பிரண்ட் ஜகன் ம்மா", என்றதும் அவர் "நீ பேசு" என்று சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.

     "அம்மா வந்துட்டாங்களா"

    "ம்ம்... ஆமா"

    "சரி அப்றம்"

    "சாப்டியா ஜானு"

    "அதெல்லாம் கரெக்டா நடந்திடும்... நீங்க சாப்டீங்களா"

    "ம்ம் சாப்டேன்"

   "அதி... வாங்களேன் அப்டியே வெளிலபோய்ட்டு வரலாம்"

   "இல்ல ஜானு... கொஞ்சம் வேலையிருக்கு..."

   "நான் என்ன ரொமேன்ஸ் பண்ணவா கூப்டேன்... வேலையாம் வேலை... நீங்க வருவீங்க... உலகத்துல நடக்குற பிஸ்னஸ் விஷயம், பொது விஷயம் அப்றம் புக்ஸ் இதுபத்தி நீங்க பேசுவீங்க... நீங்க போடுற ரம்பத்தை கேக்க தானே நானே வாலன்டியரா வர சொல்றேன்... எதுக்கு வர சொல்றேன்..."

    "எதுக்கு"

    "உங்கள பாக்காம என்னால இருக்க முடியாதுல்ல அதான்"

   "அப்டியா"

   "பின்ன வேறென்ன... நீங்க அதிரதன் இல்லங்க... சாமியார் அதிரதன்..."

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now